Saw Dust Business Plan - இரும்பு பட்டறை, பண்டம் தயாரிக்கும் பேக்கரிகள், ஒரு சில உணவு பொருட்கள் தயாரிக்கும் இடங்கள் என பல இடங்களில் விறகு மற்றும் மரத்தூள் அடுப்பு பயன்படுத்தப்பட்டு வருகிறது, அங்கெல்லாம் மரத்தூள் என்பது தினமும் தேவைப்படும் இன்றியமையாத பொருளாக இருக்கிறது, செங்கல் சூளைகள், சுடுகல் தயாரிக்கும் இடங்களிலும் மரத்தூளின் தேவை இருக்கிறது.
அந்த வகையில் மரத்தூளை கொள்முதல் செய்து சந்தைப்படுத்துவதன் மூலம் அது ஒரு நல்ல தொழிலாக அமைய வாய்ப்புகள் இருக்கிறது, இந்த தொழிலுக்கு தேவையானதெல்லாம் ஒரு குட்டி யானை வாகனம், ஒரு குடோன் இவ்வளவு இருந்தால் போதும், சரி மரத்தூளை எங்கு கொள்முதல் செய்வது என கேட்டால், கதவு, ஜன்னல், கட்டில் தயாரிக்கும் வுட்ஸ் கடைகளில் தினசரி கிலோ கணக்கில் அள்ளலாம்,
அந்த மர தயாரிப்பு கடைகள் எங்கெல்லாம் இருக்கிறதோ தேடிச் சென்று அவர்களுடன் ஒரு இணக்கம் வைத்துக் கொள்ள வேண்டும். தினசரி உருவாகும் மரத்தூள்களை வண்டிகளில் அள்ளி அதை குடோன்களில் போட்டு அதை எல்லாம் 20 கிலோ மூடைகளாக கட்டி வைத்துக் கொள்ள வேண்டும், அள்ளுதல் கூலி, வண்டி எல்லாம் போக கடைகளில் நீங்கள் கிலோ 3 ரூபாய்க்கு எடுக்கலாம்.
மரத்தூளின் விற்பனை விலை என்பது கிலோ 7 ரூபாய்க்கு கடைகளுக்கு விற்கலாம், ஒரு நாள் ஒன்றுக்கு செங்கல் சூளைகள், பண்டம் தயாரிக்கும் நிறுவனங்களுக்கு எல்லாம் குறைந்தது 50 கிலோ முதல் 100 கிலோ வரைக்கும் தேவைப்படும், ஒரு நாள் ஒன்றுக்கு ஒரு 300 முதல் 400 கிலோ நேரடியாக சந்தைப்படுத்தினால் கூட சராசரியாக மாதம் ரூ 30,000 வரை சம்பாதிக்க முடியும்.