• India

ரப்பர் பேண்ட் தொழில்...சிறிய முதலீடு போதும்...நல்ல வருமானம் பார்க்கமுடியும்...!

Rubber Band Business Ideas

By Ramesh

Published on:  2025-01-02 17:08:20  |    1473

Rubber Band Business Ideas - பொதுவாக ஹோட்டல்களிலோ, பேக்கரிகளிலோ, பல சரக்கு கடைகளிலோ இல்லை வேறு ஏதேனும் பொருட்களை பேக்கிங் செய்வதிலோ ரப்பர் பேண்ட் என்பது முக்கிய பங்கு வகிக்கிறது, தற்போது நூல்களை வைத்தோ, சணல்களை வைத்தோ பேக்கிங் செய்வதில் சிரமம் இருப்பதை உணர்ந்து, அனைவரும் ரப்பர் பேண்ட்டுக்கு மாறி வருகின்றனர்.

அந்த வகையில் ரப்பர் பேண்டை மொத்தமாக கொள்முதல் செய்து, அதை பேக்கிங் செய்து சந்தைப்படுத்துவது எப்படி என்பது குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம், இதற்கு பெரிதாக முதலீடுகள் ஏதும் தேவைப்படாது, ஒரு கிராம் தராசு, பேக்கிங் கவர்கள், ரப்பர் மூடைகள் இவ்வளவு போதும், முக்கால், ஒரு இன்ச், 1 1/2 இன்ச் ரப்பர்கள் தான் சந்தைகளில் அதிகம் விற்பனையாகும்.



அந்த வகையில் அந்த ரப்பர்களை மட்டும் அதிகமாக மூடைகள் எடுத்து பேக்கிங் செய்வது நல்லது, பெரிய ரப்பர்கள் இண்டஸ்ட்ரிகளுக்கு மட்டுமே தேவைப்படும், நீங்கள் இருக்கும் இடத்திற்கு அருகில் ஏதேனும் தொழிற்சாலைகள் இருந்தால் பெரிய ரப்பர்களும் வாங்கி சந்தைப்படுத்தலாம், 50 கிராம், 100 கிராம், 200 கிராம் பேக்கிங்களாக ரப்பர்களை பிரித்து விற்கலாம்.

ரப்பரை நீங்கள் மூடையாக வாங்கும் போது கிலோ ரூ 400 முதல் 450 வரை மொத்த விலைக்கு வாங்கலாம், விற்கும் போது 50 கிராம் ரூ 50 வரை சந்தைகளில் விற்கப்படுகிறது, மொத்த கடைகளுக்கு கொடுக்கும் போது, ஒரு 10 ரூபாய் குறைத்துக் கொள்ளலாம், மாதத்திற்கு உங்களால் ஒரு 50 முதல் 60 கிலோ சந்தைப்படுத்த முடிந்தால் கூட உத்தரவாதமாக ஒரு 45,000 வரை வருமானம் பார்க்கலாம்.