Rasna Making Business Ideas - ரஸ்னா என்பது எளிதாக தயாரிக்க கூடிய ஒரு குளிர் பானம், என்ன தான் பல்வேறு குளிர்பானங்கள் சந்தைகளில் வந்தாலும் கூட இன்னமும் ரஸ்னா விரும்பிகள் சந்தைகளில் இருக்க தான் செய்கிறார்கள், அந்த வகையில் இலாபகரமான முறையில் ரஸ்னா தயாரிப்பில் ஈடுபடுவது எப்படி என்பது குறித்து இந்த தொகுப்பில் முழுமையாக பாக்கலாம்.
பொதுவாக ரஸ்னா தயாரிப்பிற்கான கான்சட்ரேசன் நீங்கள் இணையத்தில் வாங்கினால் அதில் 30 பாக்கெட்டுகள் கூட வருவது கடினம், அதே சமயத்தில் எசன்ஸ் கடை உங்கள் ஊரில் மார்க்கெட்டுகளில் இருக்கும் அல்லவா, அங்கு நேரடியாக சென்று ரஸ்னாவிற்கு கான்சண்ட்ரேசனை வாங்கி கொள்ளலாம், அங்கு ஒரு பாக்கெட்டுகளிலேயே 50 லிட்டர் வரை போடக்கூடிய வகையில் இருக்கும்.
முக்கியமாக ரஸ்னாவிற்கு சீனி அதிகமாக தேவைப்படும், அந்த வகையில் சீனியை அதிகமாக பயன்படுத்தும் பட்சத்தில் ஒரு பாக்கெட் 5 ரூபாய்க்கு விற்பது மிக கடினம், படிகம் மிகுந்த சீனி அதே கெமிக்கல் கடைகளில் கிடைக்கும் கொஞ்சம் சீனியும், கொஞ்சம் அந்த படிக சீனியும் கலந்து கொள்ளலாம், 1 லிட்டரில் 6 பாக்கெட்டுகள் போட முடியும், அந்த வகையில் ஒரு கான்சண்ட்ரேசனில் 300 பாக்கெட்டுகள் போடலாம்.
ஒரு பாக்கெட் 4 ரூபாய்க்கு மொத்த விலைக்கு விற்றால் கூட 300 பாக்கெட்டுகளை ஒரே நாளில் சந்தைப்படுத்தினால் ரூ 1200 வரை வருமானம் பார்க்கலாம், சீனி, கான்சன்ட்ரேசன், படிகம், ரஸ்னா பேக்கிங் பாக்கெட்டுகள் என எல்லாம் ஒரு 600 ரூபாய் போனால் கூட மீதி 600 ரூபாய் தினசரி இலாபமாக கையில் நிற்கும் என்பதில் எந்த வித ஐயமுமில்லை.
" சராசரியாக பார்க்கும் போது சரியாக சந்தைப்படுத்தினால் மாதம் 15000 ரூபாய் வரை இலாபமாக கையில் நிற்கும், வெயில் காலங்களில் விற்பனை ஏகபோகமாக இருக்கும், பேக்கிங் மெசின்கள் வாங்கி வைத்துக் கொண்டால் அதிக தயாரிப்பில் ஈடுபட்டு அதிகமாக சந்தைப்படுத்த முடியும் "