Popcorn Business Ideas Tamil - நல்ல இலாபம் தரும் வகையில் பாப்கார்ன் விற்பனை தொழில் துவங்குவது எப்படி என்பது குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
Popcorn Business Ideas Tamil - பாப்கார்ன் விற்பனை என்பது சிறிய முதலீட்டில் அதீத இலாபம் தரும் தொழில், ஆனால் முறையாக சரியான இடத்தில் விற்பனையை நிறுவ வேண்டியது அவசியம் ஆகிறது, உதாரணத்திற்கு தியேட்டர் அருகாமையில், பஸ் ஸ்டாண்டுகள் அருகில், நல்ல மக்கள் கூடும் மார்க்கெட்டுகள் அருகில், பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் அருகில் என இந்தெந்த இடங்களில் எல்லாம் வைக்கும் போது பாப்கார்ன் அமோகமாக விற்கும், நல்ல குவாலிட்டியான கார்ன்களை பயன்படுத்துவதும் அவசியம்.
சரி, முதலீடுகள் என்ன?
பொதுவாக கார்ன் போடுவதற்கான மெசின்கள் தான் இத்தொழிலுக்கு மிகப்பெரிய முதலீடு, எல்லா விலைகளிலும் கமெர்சியல் கார்ன் மெசின்கள் கிடைக்கின்றன, ஆனால் குறைந்த பட்சம் ஒரு ரூ 15,000 வரை செலவழித்து நல்ல மெசினாக பார்த்து வாங்க வேண்டியது வரும், ஒரு 3 மெசின்கள் வாங்கி 3 இடங்களில் பாப்கார்ன் ஸ்டால் போடலாம், உங்களுக்கு ஒன்றே போதும் என்றால் ஒன்றும் வாங்கி கொள்ளலாம், கோயம்புத்தூர், ஈரோடு பகுதிகளில் கார்ன் மெசின்கள் தரமாகவும் மலிவாகவும் கிடைக்கின்றன.
சரி, இலாபம் எப்படி இருக்கும்?
கார்ன் பொறுத்தவரை மொத்த விலையில் 35 ரூபாய் முதல் 120 ரூபாய் வரை கிடைக்கிறது, விலை தரத்தை பொறுத்தது, சராசரியாக நீங்கள் கிலோ ரூ 50 கொடுத்து வாங்கிறீர்கள் என வைத்துக் கொள்வோம், ஒரு கிளோவிற்கு 35 பாக்கெட்டுகள் வரை கிடைக்கும், ஒரு பாக்கெட் சந்தைகளில் ரூ 10 முதல் 20 ரூபாய் வரை விற்கப்படுகிறது, தியேட்டர்களில் எல்லாம் ஒரு கார்ன் செர்வ் ரூ 40 முதல் ரூ 50 வரை விற்கப்படுகிறது,
நீங்கள் ஒரே ஒரு மெசின் வைத்திருக்கிறீர்கள் என வைத்துக் கொள்வோம், உங்களுக்கு தினசரி 10 கிலோ வரை பாப்கார்ன்கள் ஓடுகிறது என்றால், ஒரு கிலோவிற்கு குறைந்தபட்சமாக 30 பாக்கெட்டுகள் வரை வரும், அந்த வகையில் 10 கிலோவிற்கு 300 பாக்கெட்டுகள் வரை ஓடுகிறது எனக் கொண்டால், நாள் ஒன்றிற்கான வருமானம் என்பது நீங்கள் நிர்ணயிக்கும் விலையை பொருத்து ரூ 2,500 முதல் 4000 வரை இருக்கலாம். மாதத்திற்கு சராசரியாக 40,000 முதல் 50,000 ரூபாய் வரை ஒரே ஒரு மெசினில் சம்பாதிக்க முடியும்.