• India

நல்ல இலாபம் தரும் பூஜை பொருள் கடை...மாதம் ரூ 30000 முதல் 40000 வரை வருமானம்...!

Pooja Items Shop

By Ramesh

Published on:  2024-12-19 17:06:06  |    636

Pooja Items Shop Ideas Tamil - பூஜை பொருள்கள் கடை என்பது ஒன்றும் இல்லை, ஒருவர் கோவிலுக்கு செல்லும் போதோ அல்லது வீட்டில் ஏதும் விசேச பூஜை நடக்கும் போதோ தேவையான பொருள்களை வாங்கும் ஒரு அங்காடி ஆகும், பெரும்பாலும் பூஜை பொருள்கள் கடை கோவில் பக்கத்திலோ அல்லது ஏதேனும் தேர் ரத வீதியிலோ அல்லது மார்க்கெட்களிலோ அமைந்து இருக்கும்.

முதலில் பூஜை பொருள்கள் கடையில் என்ன என்ன இருக்க வேண்டும் என்றால், சந்தனம், குங்குமம், சூடம், நாமக்கட்டிகள், பத்தி வகைகள், ஹோமத்திற்கு பயன்படுத்தும் நவதானியங்கள் மற்றும் வேர்கள், கயிறுகள், மணிகள், கோவிலுக்கு உடுத்தும் வேஸ்டிகள், துண்டுகள், பன்னீர், சாணப்பொடி, வெற்றிலை, பாக்கு உள்ளிட்ட பொருள்கள் முக்கியமாக பூஜை பொருள்கள் கடையில் இடம் பெற வேண்டும்.



முதலீடு என்னும் போது சிறிய கடையாக வைக்க போகிறீர்கள் என்றால் ஒரு இரண்டு இலட்சங்கள் போதுமானதாக இருக்கும், கொஞ்சம் பெரிய கடையாக வைக்கபோகிறீர்கள் என்றால் 4 முதல் 5 இலட்சங்கள் வரை ஆகலாம், முத்ரா லோன் திட்டங்களின் மூலம் கடையின் ஆவணங்கள் எல்லாம் சரியாக இருக்கும் பட்சத்தில் வங்கிகளில் கடனாகவும் பெற்றுக் கொள்ளலாம்.

இலாபத்தை பொறுத்தவரை பூஜை பொருள்களுக்கு 40 முதல் 60% வரை இலாபம் இருக்கும், திருவண்ணாமலை, மதுரை உள்ளிட்ட பகுதிகளில் பூஜை பொருள்கள் தயாரிப்பு நிறுவனங்கள் அதிகமாக இருக்கின்றன, நேரடியாக கொள்முதல் செய்யும் பட்சத்தில் உங்கள் இலாப சதவிகிதத்தை இன்னும் அதிகம் ஆக்கலாம், நல்ல பிரபல கோவில் அல்லது மார்க்கெட்டின் அருகில் கடை அமையும் பட்சத்தில் மாதம் சராசரியாக ரூ 30,000 முதல் 40,000 வரை வருமானம் பார்க்கலாம்.

" ஹோமம் செய்யும் ஒரு சில பூசாரிகள், ஒரு சில முக்கிய கோவில்களுடன் நீங்கள் இணக்கத்தில் இருக்கும் பட்சத்தில் நிறுவனத்தை இன்னும் விரிவுபடுத்திட அது வாய்ப்பாக அமையும் "