Pongal Poo Selling Ideas Tamil - பொங்கல் என்றாலே ஒரு திருநாள் தான், இது தமிழகத்தில் மட்டும் கொண்டாடப்படுவதில்லை, தேசம் எங்கும் கொண்டாடப்படும் ஒரு விவசாய திருநாளாக கொண்டாடப்படுகிறது, என்ன ஒவ்வொரு மாநிலங்களுக்கும் இந்த திருவிழாவிற்கு ஒவ்வொரு பெயரை சூட்டி கொண்டாடிக் கொள்கின்றன, ஆனாலும் அனைவரும் இத்திருநாளில் வணங்குவது விவாசயத்தின் தலைவன் சூரியனை தான்.
சரி பொதுவாக இந்த பொங்கல் திருநாளில் என்ன என்ன இடம் பெறும் என்றால், முக்கியமாக இனிப்பு பொங்கல், கரும்பு, தேங்காய், பழம் என இவையெல்லாம் முக்கியமாக இடம் பெறுவது போல பொங்கல் பூ என்ற ஒரு பூவும் இதில் இடம் பெறும், பொதுவாக பொங்கல் அன்று மட்டுமே இதை மக்கள் பரவலாக பயன்படுத்துவார்கள், வீட்டு வாசலிலும் பானைகளிலும் இந்த பொங்கல் பூவை கட்டி தொங்க விடுவர்.
பொதுவாக இந்த பூச்செடியை பூளை செடி அல்லது கண் பூளை செடி என கிராமங்களில் அழைப்பர், பொதுவாக வயல்காட்டின் ஓர வெளியில் நிறைய கிடைக்கும், எவ்வளவு வேண்டுமானாலும் ஆய்ந்து கொள்ளலாம், வெட்ட வெளியிலும் மேச்சல் நிலங்களிலும் கூட நிறைய கிடைக்கும், மொத்தமாக ஒரு சாக்கை எடுத்துக் கொண்டு ஆய்ந்து சாக்கு முழுவதும் நிரப்பிக் கொள்ளுங்கள்.
அதை ஒரு 100 கட்டாக பிரித்து வைத்து, நல்ல சந்தை பகுதியில் உட்கார்ந்து ஒன்று விலை 20 ரூபாய் என விற்றால், பொங்கலுக்குள் அத்துனையும் விற்று தீர்ந்து விடும், எந்த வித முதலீடும் இல்லாமலே தை பிறக்கும் போது உங்கள் கைகளில் ஒரு 2000 ரூபாய் இருக்கும், முக்கியமாக நீங்கள் விற்பனை செய்யும் இடம் என்பது நல்ல மக்கள் கூடும் சந்தைப்பகுதியாக இருப்பது அவசியம்.