Pongal Based Business Ideas - தை பிறந்தால் வழி பிறக்கும்னு சொல்லுவாங்க, அந்த வகையில தை பிறக்கும் முன்னமே ஒரு வழி பிறக்கனும், தை பிறந்ததும் கைல கொஞ்சம் பணம் இருக்கனும் அப்படின்னு நினைக்கிறவங்க இந்த பொங்கலுக்கு ஒரு மஞ்சள் குலை கடை போடலாம், சும்மா தெருவில் ஒரு பிளாஸ்டிக் போராவ விரிச்சி மார்க்கெட் பகுதிகள்ல வச்சா நல்லாவே ஓடும்.
உலகளாவிய அளவில் 62 சதவிகித மஞ்சள் வர்த்தகத்தை இந்தியா தான் கொண்டு இருக்கிறது, அதே சமயத்தில் இந்தியாவில், மஞ்சள் உற்பத்தியில் தமிழகம் நான்காவது இடத்தில் இருக்கிறது, அதுனால மஞ்சள் குலை வாங்குவதில் சிரமம் இல்லை, சரி தமிழகத்துல எங்க வாங்கலாம்னு கேட்டா ஈரோடு, கோயம்புத்தூர் தான், அங்க தவிர வேற எங்கயும் போக தேவையில்லை.
கிட்டத்தட்ட தமிழகத்தின் 70% மஞ்சள் உற்பத்தி இந்த இரண்டு மாவட்டங்கள்ல தான் நடக்குது, அதுனால நேரடியா ஈரோடோ, கோயம்புத்தூரோ வண்டி எடுத்து போயிடனும், கைல 5000 மஞ்சள் குலைகள் வாங்கி வண்டில எடுத்து போட்டுக்கனும், பின்னர் உங்கள் ஊர், அருகில் இருக்கும் ஊர் என மூன்று இடங்கள்ல கடை வைக்கிறது நல்லது, முக்கிய மார்க்கெட் பகுதியா கண்டிப்பா அது இருக்கனும்.
பொதுவாக ஒரு ஜோடி மஞ்சள் குலை நீங்க நேரடியா விவசாயிகள்ட்ட சென்று கொள்முதல் செய்யும் போது ரூ 20 முதல் 25 வரைக்கும் விற்பாங்க, நீங்க ஒரு ஜோடி ரூ 50 முதல் 60 ரூபாய் வரை விற்கலாம், பொங்கலுக்கு உள்ள ஒரு 5000 குலை அதாவது ஒரு 2500 ஜோடி வித்துட்டீங்கன்னா, நீங்கள் தை பிறக்கும் போது இலட்சாதிபதி தான், நல்ல தரமான மஞ்சள் குலையை பார்த்து சேதமில்லாமல் வாங்கி வந்தால் கழிவுகளை குறைக்கலாம்.