• India

பீனாயில் தயாரிப்பு...சிறிய முதலீடு...மாதம் ரூ 30000 வரை இலாபம் பார்க்கலாம்...!

Phenyl Business Plan

By Ramesh

Published on:  2024-12-26 16:01:43  |    867

Phenyl Business Plan - என்ன தான் மார்க்கெட்களில் வித்தியாசம் வித்தியாசம் ஆக பல வித க்ளீர்னர்கள் வந்தாலும் கூட, இன்னாமும் இந்த கலர் பீனாயில்களுக்கான மவுசு என்பது சந்தைகளில் இருக்க தான் செய்கிறது, பாத்ரூம் அலசுவதற்கும் சரி, வீட்டை துர்நாற்றம் இல்லாமல் அலசுவதற்கும் சரி, சந்தையில் கிடைக்கும் பிராண்டடு க்ளீனர்களை விட பீனாயில்கள் சிறப்பாக செயல்பட கூடியவையாகவே இருக்கின்றன.

அந்த வகையில் பீனாயில் தயாரிப்பில் ஈடுபட்டு நல்ல இலாபம் பார்ப்பது எப்படி என்பது குறித்து பார்க்கலாம், பீனாயில் தயாரிப்பு என்பது மிக எளிதான முறை தான், முதலில் கெமிக்கல் கடைகளில் சென்று பீனாயில் கான்சன்ட்ரேட்டர் வாங்கிக் கொள்ள வேண்டும், ஒரு லிட்டரின் விலை நறுமணங்கள் மற்றும் குவாலிட்டியை பொறுத்து 150 ரூபாய் முதல் 300 ரூபாய் வரை கிடைக்கிறது.



ஒரு லிட்டரில் சுமாராக 30 முதல் 35 லிட்டர் வரை பீனாயில் நீங்கள் தயார் செய்ய முடியும், பீனாயில் தயாரிக்க நன்னீரை மட்டுமே பயன்படுத்த வேண்டும், பாட்டில் லேபல் என எல்லாம் சேர்த்து ஒரு பாட்டில் பீனாயில் தயாரிக்க ரூ 9 முதல் 10 ரூபாய் வரை ஆகலாம், மொத்த விலை கடைகளில் ரூ 15 முதல் 17 ரூபாய் வரை கொடுக்கலாம், ரீட்டைலுக்கு ரூ 20 முதல் 30 வரை விற்கிறார்கள்.

தினசரி  ஒரு 200 பீனாயில்களை நீங்கள் மொத்த விலை கடைகளுக்கு சப்ளை செய்தால் கூட, உங்களது தினசரி வருமானம் என்பது ரூ 3000 வரை இருக்கும், அதில் இலாபம் என்பதி தினசரி 1000 ரூபாய் வரை கையில் நிற்கும், மாதத்திற்கு என்று எடுத்துக் கொண்டால் சிறிய குடிசைத் தொழில் அளவிற்கு செய்தால் கூட குறைந்தது ரூ 30000 கையில் இலாபமாக நிற்கும்.

" பெரிய அளவில் பல மார்க்கெட்களுக்கு சப்ளை செய்யும் அளவிற்கு மெசினரிகல் எல்லாம் வைத்து நிறுவனத்தை அமைத்தால், சந்தைப்படுத்தும் அளவு அதிகரிக்கும், மார்க்கெட் விரிவடையும், மாதம் இலட்சங்களில் கூட பீனாயில் தயாரிப்பில் இலாபம் பார்க்கலாம் "