Boiled Pulses Shop - பொதுவாக பயறு வகைகள் புரதங்கள், வைட்டமின்கள், நார்ச்சத்துக்கள் மற்றும் சில மினரல்கள் நிறைந்தது, பொதுவாக ஏதாவது ஒரு மருத்துவ பிரச்சினைகளுக்காக மருத்துவரை அணுகும் போது தினமும் ஏதாவது பயறு வகைகளை சாப்பிடுங்கள் என சொல்லி பல முறை கேட்டு இருப்போம், காரணம் பயறுகள் அவ்வளவு சத்து மிகுந்தவைகளாக இருக்கின்றன.
அந்த வகையில் ஒரு சிறிய பயறு கடையை வைத்து அதை எவ்வாறு சந்தைப்படுத்துவது என்பது குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம், பயறு கடையை தள்ளு வண்டியிலோ அல்லது ஒரு கடையாகவோ நிறுவலாம், கடையாக நிறுவும் பட்சத்தில் கடையை பஞ்சாயத்து அல்லது நகராட்சிகளில் ஆவணப்படுத்திக் கொண்டு லைசென்ஸ் பெற்றுக் கொள்வது அவசியம் ஆகிறது.
பயறுகளை தேவைக்கேற்ப முதலில் வாங்கி கொள்ள வேண்டும், மொச்சை, தட்டை பயறு, நாட்டு கொண்ட கடலை, பாசி பயறு, கானம் போன்ற பயறு வகைகள் சந்தைகளில் நல்ல மார்க்கெட் மதிப்பு உடையவை, இது போக வேர்கடலை வேண்டுமானால் வைத்துக் கொள்ளலாம், அவித்து கறுவேப்பிலை, கடுகு போட்டு தாளித்து ஒருவருக்கு கொடுக்கும் போது கொஞ்சம் வெங்காயம் தூவி கொடுக்க வேண்டும்.
பொதுவாக சந்தைகளில் ஒரு பயறு பிளேட் 20 ரூபாய் வரையிலும் விற்கிறார்கள், தினசரி ஒரு 50 முதல் 75 பேரை உங்கள் கடைகளின் மூலம் அணுகினால் கூட தினசரி ரூ 1000 முதல் 1500 வரை சம்பாதிக்க முடியும், அதில் இலாபம் என்பது சராசரியாக ரூ 500 முதல் 750 வரை இருக்கும், மாதத்திற்கு ரூ 15,000 முதல் 20,000 வரை இலாபம் மட்டும் தனியாக கையில் நிற்கும்.