• India
```

தினசரி ரூ 2000 வரை இலாபம் தரும்...பேப்பர் கட்டு தொழில்...!

Paper Kattu Business Ideas Tamil

By Ramesh

Published on:  2024-11-21 15:25:18  |    1246

Paper Kattu Business Ideas Tamil - நல்ல இலாபம் தரும் வகையில் பேப்பர் கட்டு தொழில் எப்படி செய்வது என்பது குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

Paper Kattu Business Ideas Tamil - பேப்பர் கட்டு தொழிலுக்கு பெரிதாக எந்த முதலீடும் தேவை இல்லை, ஆனால் ஒரு TVS XL நிச்சயம் இருக்க வேண்டும், அதை ஒரு ட்ரை சைக்கிளுடன் இணைத்து வைத்துக் கொள்ள வேண்டும், இது போக ஒரு நான்கைந்து சுட்லி கயிறு பண்டல் வாங்கி வைத்துக் கொள்ள வேண்டும், ஒரு தராசு, இவ்வளவு தான் ஒரு பேப்பர் கட்டு தொழிலுக்கான மொத்த முதலீடு ஆக அறியப்படுகிறது.

இந்த தொழிலை நீங்கள் வீட்டில் இருந்தே கூட செய்ய முடியும், தினமும் காலை எந்திரித்தவுடன் வண்டியை எடுத்துக் கொண்டு தெருக்கள் தெருக்களாக வீடுகள், வங்கிகள், கடைகள் என எல்லா இடத்திற்கும் சென்று நியூஸ் பேப்பர்களை கலெக்ட் செய்ய வேண்டும், பொதுவாக ஒரு கிலோ தமிழ் நியூஸ் பேப்பர் 15 ரூபாய்க்கு எடுக்கலாம், ஆங்கில பேப்பர் 20 ரூபாய்க்கு எடுக்கலாம்.



காலை முதல் சாயங்காலம் வரை வண்டிகளை எடுத்துக் கொண்டு புது புது இடங்களுக்கு சென்று பேப்பர்களை கலெக்ட் செய்து வர வேண்டும், எடுத்த பேப்பர்களை எல்லாம் வீட்டிற்கு வந்த நீட்டாக அடுக்கி அது அனைத்தையும் 10 கிலோ கட்டுகளாக சுட்லி கயிறு வைத்து இறுக்க கட்ட வேண்டும், ஆங்கில பேப்பர் தனியாக, தமிழ் பேப்பர் தனியாக கட்டுகளை கட்ட வேண்டும்.

ஒரு சில பலசரக்கு கடைகள், பேக்கரிகள், பேக்கிங் கடைகள், ஹோட்டல்கள் இவர்களுடன் ஒரு பேச்சு வார்த்தை ஒப்பந்தம் வைத்துக் கொண்டு தினசரி பேப்பர் கட்டுகளை அங்கு சென்று போடலாம், தமிழ் பேப்பர் கிலோ ரூ 35, ஒரு கட்டு ரூ 350, ஆங்கில பேப்பர் கிலோ ரூ 40, ஒரு கட்டு ரூ 400 என சந்தைகளில் விற்கிறார்கள், ஒரு நாளைக்கு 10 கட்டு போடுகிறீர்கள் என்றால் தினசரி ரூ 2000 வரை இலாபம் கையில் நிற்கும்.

" களத்தில் இறங்கி நீங்கள் உழைக்கும் பட்சத்தில் பேப்பர் கட்டு தொழில் மாதம் 1 இலட்சம் முதல் 1.20 இலட்சம் வரை வருமானம் பார்க்க முடியும், அதில் இலாபம் மட்டுமே ரூ 45,000 முதல் 60,000 வரை கையில் நிற்கும் "