Old Silk Saree Collection Centre Ideas - பழைய பட்டுகளை கொள்முதல் செய்து அதன் மூலம் எவ்வாரு இலாபம் பார்ப்பது என்பது குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
Old Silk Saree Collection Centre Ideas - பழைய பட்டு சென்டர் என்பது பழைய பட்டுகளை கொள்முதல் செய்ய அமைக்கப்படும் ஒரு கடை அமைப்பு என கொள்ளலாம், பொதுவாக இந்த கடை அமைப்பதற்கு பெரிய கொள்முதல் எல்லாம் தேவை இல்லை, ஒரு தராசு, கொஞ்சம் தொழிற்சாலைகளில் பயன்படுத்தப்படும் அமிலக்கலவை, ஒரு தேய்ப்பு கல், கொஞ்சம் இடம், ஒரு 10 க்கு 10 அகலம் இருந்தால் கூட ஒகே தான், ஆனால் மக்கள் கூடும் இடத்தில் இருக்க வேண்டும்.
ஒரு கவர்ச்சிகரமாக கடைக்கான போர்டும் இருந்தால் இன்னும் நலம், சரி பழைய பட்டில் அப்படி என்ன இருந்து விட போகிறது என்றால், ஆம் இருக்கிறது, சரிகை என்று சொல்வார்கள், பெரும்பாலும் பழைய பட்டுகளில் அதிகமாக பட்டுகளோடு வெள்ளி சரிகை நூலாக நெய்து இருப்பார்கள், அந்த காலத்தில் ஒரு 3000 ரூபாய்க்கு வாங்கிய பழைய பட்டு கிழிந்து இருந்தாலும் கூட அதன் மதிப்பு இன்று ரூ 7,000 முதல் 20,000.
முதலில் கடையை வைத்து விட்டு, கொஞ்சம் கடைக்கான விளம்பர நோட்டிஸ்சும் அடித்து விட வேண்டும், தெரு வியாபாரிகள் மற்றும் பழைய சீலைகள் எடுக்கும் வியாபாரிகளுடன் கொஞ்சம் இணக்கம் வைத்துக் கொள்ள வேண்டும், யாராவது பட்டு கொண்டு வரும் பட்சத்தில் முதலில் சரிகை பட்டு தானா என்பது அமிலம் தெளித்து, கல்லில் உரசி தெரிந்து கொள்ள வேண்டும்.
சரிகை நன்கு வெள்ளை ஆகும் பட்சத்தில் வெள்ளி சரிகை பட்டு தான், கொஞ்சம் பச்சை அடித்தால் அது கலப்படம் விலை கம்மியாக கேட்க வேண்டும், சிகப்பு அடித்தால் செம்பு, அமிலத்திற்கு அப்படியே பொங்கினால் அது பிளாஸ்டிக் சரிகையாக இருக்கும் விலை போகாது, இவ்வாறாக தினசரி ஒரு இரண்டு பட்டு வந்தால் கூட, ஒரு நாளைக்கு சராசரியாக ரூ 2000 முதல் 4000 வரை இலாபம் பார்க்கலாம்.
” இங்கு பட்டுகளை சரிகை வாரியாக பிரிப்பதில் தான் உங்கள் சாமர்த்தியம் இருக்கிறது, இத்தொழிலில் ஒரு நாளைக்கு பத்து பழைய பட்டுகளை கொள்முதல் செய்து இலட்சங்களில் இலாபங்கள் பெறுபவர்களும் இருக்க தான் செய்கிறார்கள், எல்லாம் சாமர்த்தியம் தான் "