• India
```

நல்ல இலாபம் தரும் வகையில் கிஃப்ட் ஷாப் வைப்பது எப்படி?

New Shop Opening Gift Ideas | Shop Opening Gift Ideas

என்ன தான் ஆன்லைன் கலாச்சாரம் தேசம் முழுக்க வேரூன்றி இருந்தாலும் கூட ஒரு சில முக்கிய வைபவங்களுக்கு இன்னமும் கிஃப்ட் ஷாப்களில் கிஃப்ட்களை வாங்குபவர்களும் இருக்க தான் செய்கிறார்கள்.

சரி முதலில் கிஃப்ட் ஷாப் வைப்பது எப்படி?

முதலில் கடை  வைப்பதற்கான அனுமதி சம்மந்தப்பட்ட மாநகராட்சி அல்லது பேரூராட்சிகளில் வாங்கி கொள்ள வேண்டும், குறைந்த பட்சம் ஒரு சுமாரான நீளமுள்ள கிஃப்ட் கடையை நன்கு வாடிக்கையாளர்கள் பிரம்மிக்கும் வகையில் கிஃப்ட்களால் அலங்கரிக்க வேண்டுமானால் ஒரு 2-3 இலட்சங்கள் வரை முதலீடு அவசியம், நல்ல பிரம்மாண்டமாக இருக்க வேண்டுமானால் ஒரு நான்கு இலட்சங்கள் அவசியம், 

பொதுவாக கிஃப்ட் ஷாப்களில் இருக்க வேண்டிய முக்கியமான கிஃப்ட்கள் டெடி பியர், விலங்கு பொம்மைகள், குழந்தைகளுக்கு கொடுக்கும் வகையிலான விளையாட்டு பொருள்கள், கடிகாரங்கள், நல்ல Quotes உள்ள போட்டோ பிரேம்கள், குட்டி குட்டி சிலைகள், சீதா ராமன் சிலைகள், ரிங்குகள், நல்ல கவிதை புத்தகங்கள், நல்ல கைவினைப் பொருட்கள்  உள்ளிட்டவைகள் முக்கியமாக வைத்துக் கொள்ள வேண்டும்.


இது போக மார்க்கெட்டுகளில் தினம் தினம் புதிது புதிதாய் வருகின்ற கிப்ட்களை அப்டேட்டடாக வாங்கி வைத்துக் கொள்வது அவசியம், பேக்கிங் மற்ரும் பேக்கிங் ஸ்டிக்கர்கள் இலவசமாக செய்து கொடுப்பது அவசியம். நிறைய பேர் தற்போதெல்லாம் லவ் பேர்ட்ஸ் உள்ளிட்டவைகளை கிஃப்டாக கொடுக்க ஆசைப்படுகின்றனர். முடிந்தால் அதையும் பார்வை படுத்தி வைத்து ஜோடி ஜோடியாக விற்கலாம், ஒரு ஜோடிக்கென அழகு அழகான கூண்டுகளும் இருக்கிறது, கூண்டுகளோடு விற்றால் இன்னும் இலாபம் இருக்கும்.

சரி, கிஃப்ட் ஷாப்பில் நல்ல இலாபம் இருக்குமா?

கிஃப்ட் ஷாப்பை பொறுத்த வரை எல்லா பொருளுக்கும் பாதிக்கு பாதி இலாபம் இருக்கும், கிஃப் ஷாப்போடு பெண்கள் விரும்பும் வகையில் கவரிங் நகைகள், வித விதமான கம்மல்கள், பெண்களுக்கான ரிங்குகள் உள்ளிட்டவைகளும் வாங்கி வைக்கலாம், அதிலும் பாதிக்கு மேல் இலாபம் இருக்கும், வைபவங்கள் என்றால் கிஃப்ட்கள் அதிகமாக ஓடும், தினசரி கவரிங் நகைகள் ஓடும் என்பதால் இரண்டையும் கிஃப்ட் ஷாப்களில் விற்பனை செய்யலாம், 


“ கிஃப்ட் ஷாப்களை பொறுத்தவரை நல்ல அலங்கரிப்பு, கடை பார்த்தவுடன் பளிச்சென்று இருக்க வேண்டும், நிறைய வகையான கிஃப்ட்கள் இருக்க வேண்டும், கவரிங் நகைகளும் மார்க்கெட்டுகளில் கிடைக்காத மாடல்கள் எல்லாம் வாங்கி வைக்கும் பட்சத்தில் மாதம் 40,000 முதல் 50,000 வரை கிஃப்ட் ஷாப்கள் வைத்து சம்பாதிக்க முடியும்"