• India
```

26 வயதில் 16.58 கோடி சொத்து மதிப்பு..களமிறங்கிய நவ்யா நந்தா..!

Navya Naveli Nanda Net Worth | Business News In Tamil

Navya Naveli Nanda Net Worth - திரைப்பட உலகத்தை விட்டு விலகி, குடும்ப நிறுவனமான Escorts Kubota-வில் 0.02% பங்குகளை நிர்வகிக்கும் தொழில்முனைவராக நவ்யா மாறினார்.

Navya Naveli Nanda Net Worth -பாலிவுட் துறையைச் சேர்ந்த பிரபலமான பச்சன் குடும்பத்தைச் சேர்ந்த நவ்யா நவேலி நந்தா, 21 வயதில் தொழில் துறையில் களமிறங்கி, தந்தை நிகில் நந்தாவின் பாதையில் நிறுவனம் ஒன்றை முன்னெடுத்து நடத்தி வருகிறார். 

அமிதாப் பச்சன் மற்றும் ஜெயா பச்சனின் பேத்தியான நவ்யா, திரைப்படத்துறையை விட்டு விலகி, தனது குடும்ப தொழிலான Escorts Kubota நிறுவனத்தில் பணியாற்றி கொண்டுள்ளார்.இந்நிலையில், 7014 கோடி மதிப்பிலான இந்த நிறுவனத்தில் நவ்யா 0.02% பங்குகளை கொண்டுள்ளார்.மேலும், நிகில் நந்தாவுக்கு 36.59% பங்குகள் உள்ளன.

நவ்யா, தொழில் துறையைத் தவிர Aara Health என்ற மகளிர் சுகாதார நிறுவனத்தின் இணை நிறுவனராக உள்ளார்.மேலும், அதனுடன் Project Naveli என்ற அறக்கட்டளையைத் துவங்கி, குடும்ப வன்முறையால் பாதிக்கப்பட்ட மகளிருக்கு உதவி செய்து வருகிறார்.


2023 நவம்பரில், அமிதாப் பச்சன் குடும்பத்தின் 50 கோடி மதிப்பிலான Pratiksha குடியிருப்பை, நவ்யாவின் தாயார் ஸ்வேதா பச்சனுக்கு வழங்கியுள்ளனர். இதன் அடிப்படையில், நவ்யாவின் சொத்து மதிப்பு தற்போது ரூ 16.58 கோடியாக கணக்கிடப்பட்டுள்ளது.