Muffler Business Ideas Tamil - வீட்டிலேயே இருக்கிறோம், காலையிலேயே மதிய சமையலையும் முடித்து விட்டு குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பி வைத்து விட்டு, கணவரை அலுவலகத்திற்கு அனுப்பி வைத்து விட்டு மதியம் முழுக்க சும்மா தான் இருக்கிறோம், அந்த சமயத்தில் ஏதாவது ஒரு சிறிய தொழில் வீட்டில் இருந்தே செய்ய முடியுமா என கேள்வி கேட்பவர்களுக்கு இந்த தொகுப்பு பயனுள்ளதாக அமையும்.
முதலில் கம்பளிக்குட்டை எனப்படும் இந்த Muffler தயாரிப்பிற்கு பெரிய முதலீடு தேவைப்படுமா என்றால் நிச்சயம் இல்லை என்று தான் சொல்ல வேண்டும், ஒரு ஆயிரம் ரூபாய் கையில் இருந்தால் போதும் இந்த தொழிலை முதற்கட்டமாக ஆரம்பிக்க அது ஏதுவாக அமையும், முதலில் மப்ளருக்கான கட்டைகள் வாங்க வேண்டும், பல அளவுகளில் வாங்கிக் கொள்ளலாம்.
இணையங்களில் கிடைக்கிறது, பேன்சி கடைகளிலும் மப்ளர் கட்டைகள் வாங்கி கொள்ளலாம், மப்ளர் நூல்களும் மொத்தமாக ஒரு கவராக வாங்கி கொள்ளலாம், உங்களுக்கான மொத்த செலவே ஒரு ஆயிரத்திற்குள் தான் இருக்கும், மப்ளர் செய்வது எளிது தான், புதியதாக செய்கிறீர்கள் என்றால் ஒரு மப்ளர் செய்து முடிக்க இரண்டு நாட்கள் எடுத்துக் கொள்ளும், பழகியவர்கள் ஒரு நாளுக்கு ஒன்றிரண்டு செய்வார்கள்.
ஒரு மப்ளர் செய்ய ஆகும் செலவு என்பது 100 ரூபாய்க்குள் தான் வரும், சந்தையில் ஒரு மப்ளர் 300 முதல் 1000 ரூபாய் வரை விற்கப்படுகிறது, தற்போதெல்லாம் மப்ளர் குளிருக்காக மட்டும் பயன்படுத்தப்படுவதில்லை, ஆண்கள் பெண்கள் என இருவரும் ஸ்டைலுக்காக பயன்படுத்துகிறார்கள், அதனால் முன்பை விட மப்ளர் ஆன்லைனில் வாங்குபவர்களின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்து இருக்கிறது.
" ஒரு மாதத்திற்கு உங்களால் வீட்டில் இருந்து ஒரு 20 மப்ளர் தயாரித்து சந்தைப்படுத்த முடியும் எனில் சராசரியாக 8000 ரூபாய் வரை வருமானம் ஈட்ட முடியும், Meesho, Amazon, Flipkart உள்ளிட்டவைகள் மூலமாகவும் உங்கள் தயாரிப்பை சந்தைப்படுத்தும் போது வருமானத்தை இன்னும் அதிகப்படுத்தலாம் "