• India
```

செல்போன் சர்வீஸ்சில்...மாதம் ஒரு இலட்சம் வரை சம்பாத்தியம்...எப்படி சாத்தியம்...?

Mobile Shop Business​ | Own Business in Tamil​

Mobile Shop Business​-வெறுமனையாக செல்போன் சர்வீஸ் மட்டும் செய்வதன் மூலம் மாதம் ஒரு இலட்சம் சம்பாதிக்க முடியுமா? அது சாத்தியமா என்பது குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

முதலில் செல்போன் சர்வீஸ் கடை எப்படி வைப்பது?

செல்போன் சர்வீஸ் கடை வைக்க வேண்டுமானால் முதலில் செல்போன் குறித்த முழு விவரங்களும் தெரிய வேண்டும், செல்போன் சர்வீஸ்சுக்கு என்று கோர்ஸ்கள் எல்லாம் இருக்கின்றன, 6 மாத கோர்ஸ்கள், 1 வருட கோர்ஸ்கள் இதனை தெளிவாக படித்துக் கொண்டால், செல்போன் குறித்த ஓரளவிற்கான ஒரு ஐடியா கிடைக்கும், பின்னர் ஏதாவது பழைய மொபைல்களை எடுத்து ரிப்பேர் செய்து பார்க்கலாம்.

வீட்டில் ரிப்பேர் ஆன மொபைல் ஏதேனும் இருந்தால் சரி செய்து பார்க்கலாம், ஓரளவிற்கு செல்போன் குறித்து முழுமையான புரிதல் கிடைத்த பின் செல்போன் சர்வீஸ் கடையை தைரியமாக துவங்கலாம், கடை எடுத்த பின்னர் ஆவணப் பதிவு செய்து கொண்டு நகராட்சிகளில் லைசென்ஸ் பெற்றுக் கொள்ளுவது அவசியம், சர்வீஸ் டூல்ஸ்கள் எல்லாம் அமேசானிலேயே கிடைக்கின்றன, ஆர்டர் போட்டுக் கொள்ளலாம், 


டிஸ்பிளேக்களை இந்தியா மார்ட் போன்ற வலைதளங்களில் மொத்தமாக கொள்முதல் செய்து கொள்ளலாம். சாதாரணமாக டிஸ்பிளே எந்த மொபைலுக்கு மாற்ற வேண்டும் என்றாலும், குறைந்த பட்ச சர்வீஸ் சார்ஜ் என்பது 2,500 ரூபாய், ஆனால் டிஸ்பிளேவின் ரேட்டோ எலக்ட்ரானிக் சந்தைகளில் மிக மிக மலிவு தான், 400 ரூபாயில் இருந்து 1,500 ரூபாய் வரையிலும் டிஸ்பிளேக்கள் கிடைக்கின்றன.

சரி, இலாபம் எப்படி இருக்கும்?

சரி நல்ல தரமான டிஸ்பிளேக்களை தான் கொள்முதல் செய்து போட போகிறீர்கள் என்றால், ஒரு டிஸ்பிளேவின் விலை 1,500 ரூபாய் வரை வரும், ஒரு போனுக்கு டிஸ்பிளே மாற்றுவதற்கு வாங்கப்படும் குறைந்த பட்ச விலை 2,500 ரூபாய், நாள் ஒன்றுக்கு ஒரு 5 போனுக்கு டிஸ்பிளே மாற்றினால் கூட, ஐந்தாயிரம் ரூபாய் இலாபம் மட்டும் தனியாக நிற்கும். மாதத்திற்கு ஒரு இலட்சத்திற்கு மேல் இலாபம் பார்க்க முடியும்.

இது போக டெம்பர் கிளாஸ், பேக் கவர்கள், குட்டி குட்டி சர்வீஸ் பிரச்சினைகள் எல்லாம் சரி செய்து கொடுக்கும் பட்சத்தில் அதிலும் இலாபம் தனியாக் கிடைக்கும், உதாரணத்திற்கு செல்போன் கவர், டெம்பர் கிளாஸ்கள் எல்லாம் சந்தையில் 100 ரூபாய் வரைக்கும் விற்கப்படுகிறது, ஆனால் எலக்ட்ரானிக் மார்க்கெட்டுகளில் அதன் விலை 40 ரூபாய் முதல் 50 ரூபாய் வரை தான். 

“ செல்போன் சர்வீஸ்சை நீங்கள் உருப்பாடியாக கற்றுக்கொள்ளும் பட்சத்தில், நீங்கள் நினைத்தால் செல்போன் சர்வீஸ்சில் மட்டுமே மாதம் ஒரு இலட்சத்திற்கும் மேல் இலாபம் பார்க்க முடியும், இது போக செல்போன்களையும் நேரடியாக கொள்முதல் செய்து விற்பனை செய்யும் போது அதிலும் ஒரு 10 முதல் 25 சதவிகிதம் வரை இலாபம் இருக்கும் "