Mineral Water Can Delivery Profit - பெரும்பாலான வீடுகளில் இன்று கேன் வாட்டர் என்பது ஒரு அத்தியாவசியமான பொருளாகவே மாறி விட்டது, நல்ல தண்ணீர் கார்பரேசன் மூலம் வீட்டிற்கே வந்தாலும் கூட, மக்கள் அந்த கார்பரேசன் வாட்டரை டேங்குகளில் ஏற்றி குளிப்பதற்கு மட்டும் பயன்படுத்திக் கொண்டு, குடிப்பதற்கும், சமைப்பதற்கும் கேன் வாட்டரையே பயன்படுத்துகின்றனர், அந்த அளவிற்கு கேன் வாட்டர் என்பது மக்களிடையே ஒரு அங்கமாக மாறி விட்டது.
சரி, பொதுவாக கேன் வாட்டர் என்ன விலைக்கு விற்கப்படுகிறது?
கிராமங்களில் எடுத்துக் கொண்டால் ஒரு கேன் வாட்டர் என்பது ரூ 30 முதல் 35 வரை விற்கப்படுகிறது, அதுவே கொஞ்சம் நகரத்தை ஒட்டி என்றால் ரூ 35 முதல் 45 வரை விலை செல்கிறது, அதுவே சுத்தமான மாநகரம் என்றால் கேன் வாட்டரின் விலை ரூ 45 முதல் 50 வரை செல்கிறது, இது போக மாடிகள், அபார்ட்மெண்ட்களுக்கு டெலிவரி செய்ய எக்ஸ்ட்ரா 5 ரூபாய் வாங்கப்படுகிறது.
சரி, பொதுவாக இந்த கேன் வாட்டர் எங்கு வாங்குவார்கள்?
நேரடி கொள்முதல், டீலர்களிடம் கொள்முதல் என கேன் வாட்டரை வாங்க இரு முறைகள் இருக்கின்றன, ஒருவர் கேன் வாட்டர் தொழில் செய்ய டீலரை அணுகுகிறார் என்றால் அவருக்கு ஒரு கேன் வாட்டர் 20 ரூபாய்க்கு கொடுப்பார்கள், அவர் அவருடைய இஸ்டம் போல என்ன விலைக்கு வேண்டுமானாலும் விற்றுக்கொள்ளலாம், அதுவே ஒருவர் கம்பெனியிடம் நேரடியாக கொள்முதல் செய்யும் போது ஒரு கேன் வாட்டரின் விலை வெறும் ரூ 7 தானாம், அப்படி என்றால் நேரடியாக கம்பெனிக்கே சென்று கொள்முதல் செய்பவரின் இலாபத்தை மட்டும் யோசித்துப் பாருங்கள்.
" அதாவது ஒருவர் டீலரிடம் கொள்முதல் செய்யும் போது அவருக்கு குறைந்த பட்சம் 100 சதவிகிதம் இலாபம் இருக்கும், அதுவே நேரடியாக கம்பெனிக்கே சென்று கேன் கொடுத்து கேன் எடுக்கும்படி, கொள்முதல் செய்யும் போது அவருக்கு ஒரு கேனுக்கே 600 சதவிகிதம் வரை இலாபம் இருக்கும் "