Mehndi Event Business Plan - தற்போதெல்லாம் குடும்ப விழா சகிதங்களில் ’மெஹந்தி அலங்கார விழா’ என்றே தனியாக ஒரு விழா எடுக்கப்படுகிறது, அது போக மணப்பெண்களும் அன்றைய காலக்கட்டத்தில் மருதாணி வைக்க ஆசைப்பட்டவர்கள், தற்போது அழகு அழகாக கைகளில் கால்களில் மெஹந்தி வைக்க ஆசைப்படுகின்றனர், அந்த வகையில் மெஹந்தி அலங்காரம் என்பது ஒரு தொழில் ஆகவே மாறி விட்டது.
அவ்வாறாக மெஹந்தி அலங்காரத்தை ஒரு தொழிலாக செய்வது எவ்வாறு என்பது குறித்து பார்க்கலாம், பொதுவாக இந்த தொழில் பெண்களுக்கு ஏற்ற தொழிலாக இருக்கிறது, கிட்டத்தட்ட ஒரு பார்ட் டைம் ஜாப் மாறி தான், ஒரு நிறுவனமாக வைத்து நடத்த இருக்கிறீர்கள் என்றால் குறைந்த பட்சம் ஒரு இரண்டு மெஹந்தி ஆர்ட்டிஸ்ட்களை கையில் வைத்துக் கொள்வது நல்லது.
ஒரு மெஹந்தி பேக்கேஜ் புக், வாடிக்கையாளர்களுக்கு கையில் கொடுத்து பாக்கும் வகையில் நல்ல டிசைன் ஆக ரெடி செய்ய வேண்டும், ஒரு நிறுவனமாக அமைக்க போகிறீர்கள் என்றால் ஒரு 10*10 கண்ணாடி ரூம், ஒரு விளம்பர போர்டு, சமூக வலைதள பேஜ்கள் இவ்வளவு போதுமானதாக இருக்கும். சமூக வலைதளம் உங்களது நிறுவனத்தை நிறைய பேரிடம் கொண்டு சேர்க்க உதவிகரமாக இருக்கும்.
ஒரு மெஹந்தி ஆர்ட்டிஸ்ட்டுக்கு தினசரி சம்பளம் 800 - 1000 ரூபாய் வழங்கப்படுகிறது, இரண்டோ மூன்றோ மெஹந்தி ஆர்ட்டிஸ்ட்களை ஒரு விழாவிற்கு நியமித்துக் கொள்ளலாம், மணமகளுக்கு மட்டும் மெஹந்தி என்றால் ஒரே ஒரு ஆர்ட்டிஸ்ட் போதுமானதாக இருக்கும், மெஹந்தி விழாவிற்கான பேக்கேஜ்கள் என்பது ரூ 7,000 முதல் 25,000 ரூபாய் டிசைன்கள் மற்றும் எண்ணங்களை பொருத்து நிர்ணயிக்கப்படுகிறது.
“ ஒரு மாதத்திற்கு இரண்டு முதல் மூன்று விழா ஆர்டர்கள் வந்தால் கூட சராசரியாக ரூ 20,000 முதல் 35,000 வரை இலாபமாக பார்க்க முடியும் "