Meesho Reselling Ideas - முதலில் இந்த Reselling ஐடியாவில் நாம் தேர்ந்தெடுக்க வேண்டியது சரியான பிராடக்டுகளை தான், சரியான பிராடக்டுகளை தேர்வு செய்தால் மட்டுமே, இந்த Reselling யில் ஓரளவிற்கு ஆவது வருமானம் ஈட்ட முடியும், சரி முதலில் இந்த Reselling னா என்னது, அதில் பிராடக்டுகளை எப்படி சரியான முறையில் தெரிவு செய்வது என்பது குறித்து முதலில் பார்த்து விடுவோம்,
Reselling என்பது உங்களிடம் எந்த ஒரு பிராடக்டுகளும் இருக்காது, ஏற்கனவே ஆன்லைனில் இருக்கும் ஒரு பிராடக்டை நீங்கள் உங்களுக்கு ஒரு மார்ஜின் வைத்து சந்தைப்படுத்துவது, உதாரணத்திற்கு ஒரு பொம்மையை எடுத்துக் கொள்வோம், அதன் விலை Meesho வில் 200 ரூபாய் என வைத்துக் கொண்டால், அந்த பிராடக்டை வாட்சப், பேஸ்புக் போன்ற சமூக வலைதளங்களில் முதலில் பகிர வேண்டும்,
நல்ல Rush உள்ள பக்கங்கள், உங்களது பேமிலி குரூப்கள், உங்களுக்கு தெரிந்தவர்கள் என யாரிடம் வேண்டுமானால் உங்களுக்கு ஒரு மார்ஜின் விலையோடு அந்த பிராடக்டின் குறிப்புகளை பகிர வேண்டும், பொம்மையின் விலை 200 என்றால் நீங்கள் ஒரு 50 ரூபாய் மார்ஜின் வைத்து ரூ 250 ரூபாய் என பதிவிடுகிறீர்கள் என வைத்துக் கொள்வோம்.
அதை ஒருவர் விரும்பி உங்களிடம் வாங்க நினைக்கிறார் என்றால், அவருடைய முகவரி மற்றும் மொபைல் நம்பரை கேட்டுக் கொண்டு, நீங்கள் Meesho செயலிக்கு சென்று அந்த பிராடக்டை தேடி, செலக்ட் செய்து, Buy Now என்ற ஆப்சனை க்ளிக் செய்து, முகவரியை பதிவிட்டு, Continue ஆப்சனை க்ளிக் செய்து, Reselling The Order என்ற ஆப்சனை க்ளிக் செய்து, Click On 'Yes' To Add Margin யில் Yes யை க்ளிக் செய்யவும்.
" அந்த பிராடக்ட் ரூ 200 என்னும் போது நீங்கள் 250 என விலை நிர்ணயித்து Place Order கொடுத்தால், ஆர்டர் நீங்கள் குறிப்பிட்டவருக்கு சென்று சேர்ந்து விடும், உங்களுக்கும் ரூ 50 ரூபாய் வரவு வைக்கப்படும், இவ்வாறாக சரியான பொருளை சந்தைப்படுத்தினால் மாதம் ரூ 10000 வரை வருமானம் பார்க்க முடியும் "