• India
```

சாப்பாடு கடை...தினசரி 3 மணி நேரம் போதும்...மாதம் ரூ 30000 வரை வருமானம்...!

Meals Shop Ideas

By Ramesh

Published on:  2024-12-11 15:23:29  |    5360

Meals Shop Ideas Tamil - நல்ல இலாபம் தரும் வகையில் மதிய சாப்பாடு கடை எப்படி வைப்பது என்பது குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

Meals Shop Ideas - பொதுவாக மதியம் என்றாலே அனைவரும் எதிர்பார்ப்பது ஒரு சாப்பாடாக இருக்கிறது, ஒயிட் ரைஸ், சாம்பார், ரசம், மோர், ஒரு இரண்டு கூட்டு இதெல்லாம் வைத்து சாப்பிட்டால் தான் சிலருக்கு மதியத்தை கடந்தது போல இருக்கும், ஆனால் வேலைக்கு சென்ற இடத்திலோ, இல்லை தினசரி இரண்டு பேரும் வேலைக்கு செல்லும் வீடுகளிலோ இதெல்லாம் செய்வதற்கு சாத்தியமில்லாததாக இருக்கிறது.

அந்த வகையில் இந்த சாப்பாட்டையை ஒரு தொழிலாக செய்து அதன் மூலம் வருமானம் எப்படி பெறுவது என்பது குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம், பொதுவாக சாப்பாடு கடை, ஒரு ஹோட்டலாகவோ அல்லது ஒரு தள்ளு வண்டி கடையாகவோ ஆரம்பிக்கலாம், மதிய நேரத்தில் தான் சாப்பாடு என்பது ஓடும், ஒரு 11:30 மணிக்கே சாப்பாடு எல்லாம் ரெடியாகும் படி பார்த்துக் கொள்ள வேண்டும்.



தினசரி இரண்டு வெவ்வேறு கூட்டுகள், அளவான சாப்பாடு, ஹோட்டல் சாம்பார், ரசம், மோர், முடிந்தால் ஒரு அப்பளம் இது அனைத்தும் ஒரு சாப்பாட்டில் இருக்கும் படி செய்து கொள்ள வேண்டும், கம்பெனிகள், மார்க்கெட்டுகள் பகுதிகளில் சாப்பாடு கடையை வைத்தால் ஒரு நாளைக்கு 70 முதல் 100 சாப்பாடுகள் கூட ஓட்டலாம், சாப்பாட்டின் விலையை நிர்ணயிப்பது சந்தையை விட கம்மியாக நிர்ணயித்தால் நல்லது.

ஒரு சாப்பாடு ரூ 60 என நிர்ணயித்தால் கூட, குறைந்தபட்சம் ரூ 15 முதல் 20 வரை இலாபம் இருக்கும், நல்ல தரமாக செய்யும் பட்சத்தில் தினசரி 100 சாப்பாடுகள் வரை தாராளமாக விற்கலாம், சராசரியாக தினசரி ஒரு 50 முதல் 60 சாப்பாடு ஓடினால் கூட மாதம் ரூ 30,000 வரை இலாபம் பார்க்கலாம், இது வெறும் 50 பேருக்கான டார்கெட் தான், அதிக அளவில் வாடிக்கையாளர்களை பெறும் பட்சத்தில் இந்த இலாபம் இன்னும் அதிகரிக்கலாம்.