• India

திருமண வரன் பதிவு மையம்...சேவையோடு வருமானமும் புரிய சிறந்த தொழில்...!

Matrimony Business Ideas

By Ramesh

Published on:  2024-12-17 19:30:42  |    354

Matrimony Business Ideas - திருமண வரன் பதிவு மையம் என்பது திருமணக் கட்டத்தில் இருக்கும் ஆண், பெண்களுக்கு சரியான வரன் அமைத்துக் கொடுக்கும் ஒரு நிறுவனம் ஆகும், தற்போதெல்லாம் யாரும் வரன்களை தேடி அலைவது இல்லை, காரணம் அவர்களுக்கு வேலையே சரியாக இருக்கிறது, ஓடிக் கொண்டே இருக்கும் சூழல், ஆன்லைனில் பதிந்து வைத்தாலும் கூட ஒரு சில முறைகேடுகளில் சிக்கிக் கொள்ளும் வாய்ப்புகள் இருக்கிறது.

அந்த வகையில் ஆன்லைனில் செயல்படும் பல்வேறு திருமண வரன் செயலிகளை விட, ஆப்லைனில் செயல்படும் திருமண வரன் மையங்கள் சிறப்பாக செயல்படுவதாக ஒரு கருத்து இருக்கிறது, அந்த வகையில் ஆப்லைனில் செயல்படும் வகையில், ஒரு திருமண வரன் மையம் அமைப்பது எப்படி என்பது குறித்து இந்த தொகுப்பில் விரிவாக பார்க்கலாம்.



பொதுவாக முதலில் சரியான இடம் ஒன்றை பார்க்க வேண்டும், ஒரு 10*10 இடமாக இருந்தால் கூட சரி தான், ஆனால் மக்கள் அதிகமாக கூடும் இடமாக இருக்க வேண்டும், அந்த இடம் இருக்கும் பஞ்சாயத்து அல்லது நகராட்சிகளில் முதலில் நிறுவனத்தை ஆவணப்படுத்தி லைசென்ஸ் பெற்றுக் கொள்ள வேண்டும், பின்னர் ஒரு கம்ப்யூட்டர், ஒரு பிரிண்டர், ஒரு போர்டு, கொஞ்சம் ப்ளைவுட்டுகள் இவ்வளவு தான் முதலீடு.

ஓரளவிற்கு முதலில் வரன்களை சேர்த்து வைத்துக் கொண்டு அதை ஒரு ஆவணம் போல டைப் செய்து ஒரு குறிப்பிட்ட பதிவெண் போட்டு கம்ப்யூட்டரில் பதிவு செய்து வைத்துக் கொள்ள வேண்டும், பின்னர் வரன்கள் தானாக வரும் சமயத்தில், மாற்றி மாற்றி கொடுத்து வரன்களை அறிமுகப்படுத்தி வைத்துக் கொள்ளலாம், பொதுவாக 6 மாதம் வரன் குறித்த தகவல்கள் கொடுப்பதற்கு ரூ 2500 வசூலிக்கிறார்கள்.

" அந்த 6 மாதம் மையத்திற்கு வரும் வரன்களை எல்லாம் பெற ரூபாய் கட்டியவர்கள் அனுமதிக்கப்படுவார்கள், 6 மாதத்திற்குள் அவருக்கு திருமணம் முடியும் பட்சத்தில் அவருடைய ஜாதக விவரங்கள் கணினியில் இருந்து நீக்கப்படும், இவ்வாறாக மாதத்திற்கு ஒரு 30 வரன் வந்தாலும் கூட எந்த ஒரு பெரிய முதலீடும் இல்லாமல் ரூ 60,000 வரை வருமானம் பார்க்கலாம் "