Maasi Karuvadu Business Ideas Tamil - பொதுவாக மாசி கருவாடு ஒரு வகை மீன் உணவு வகை, மீனே பிடிக்காது என்பவர்கள் கூட விரும்பி உண்ணும் உணவு வகையாக மாசி கருவாடு இருக்கிறது, பொதுவாக சாதாரண கருவாடு, மீன் போல இது துர்நாற்றம் வீசாது, அந்த மீன் வாடை பிடிக்காதவர்கள் நிச்சயம் மாசி கருவாடை ட்ரை பண்ணலாம், பொதுவாக மாசிக் கருவாடின் தோற்றம் மாலத்தீவு என்றாலும் தற்போது இலங்கை மற்றும் இந்தியாவிலும் இந்த உணவு வகை பரவி இருக்கிறது.
பொதுவாக இந்த மாசிக் கருவாடு கல் போல இருக்கும், அதை உரலில் போட்டு, நிறைய பொடி வெங்காயம், கொஞ்சம் சீரகம் எல்லாம் சேர்த்து நன்கு இடித்து, பின் எண்ணெய் சேர்த்து அடுப்பில் தாளித்து எடுத்தால் சுவையான மாசிக் கருவாடு ரெடி, இதன் சுவை கருவாடு, மீனை விரும்பாதவர்களை கூட விரும்பி உண்ண வைத்து விடும், அந்த அளவிற்கு சுவை இருக்கும்.
சரி, இந்த மாசிக்கருவாடை தயாரித்து எப்படி சந்தைப்படுத்துவது?
பொதுவாக இந்த மாசிக்கருவாடு சூரை மீன்களில் தான் தயாரிக்கப்படும், சூரை மீனை நன்கு செதில், குடல் நீக்கி, துண்டுகள் துண்டுகளாக வெட்டி, அரை வேக்காடு வேக வைக்க வேண்டும், பின்னர் இந்த மீனை ஒரு துணியில் கட்டி நன்கு நீர் போகும் அளவிற்கு நன்கு பிழிந்து எடுத்து வெயிலில் காய வைக்க வேண்டும், பின்னர் பூட்டிய அறையில் பரண் அடுப்பு அமைத்து அந்த மீனை வைக்கோலால் புகையூட்ட வேண்டும்.
இரண்டு நாட்கள் கழித்து அந்த மீன் கல் போல மாறி இருக்கும், இது தான் மாசிக் கருவாடாக சந்தைகளில் விற்கப்படுகிறது, ஒரு கிலோ மாசிக் கருவாடின் விலை சந்தைகளில் ரூ 1000 வரை விற்கப்படுகிறது, பொதுவாக இந்த சூரை மீனின் விலை என்பது வரத்தை பொறுத்து ரூ 100 முதல் 350 வரை விற்கப்படும், அதை அப்படியே மாசிக் கருவாடாக மாற்றினால் கிலோ 1000 ரூபாய் வரை விற்க முடியும்.
" பொதுவாக இந்த மாசிக் கருவாடு வெளி நாடுகளுக்கு எல்லாம் ஏற்றுமதியாகிறது, சரியாக தயாரித்து சந்தைகளை முறைப்படுத்தினால் மாதம் இத்தொழிலில் இலட்சங்களில் வருமானம் பார்க்கலாம் "