LED TV Repair Shop Ideas - சிறிய முதலீட்டில் LED Repair ஷாப் வைத்து இரு குறிப்பிடத்தக்க வருமானம் எப்படி ஈட்டுவது என்பது குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
ஒரு காலத்தில் டிவி என்பதே வீட்டிற்கு வீடு எனவெல்லாம் இருக்காது, தெருவில் யாராவது ஒருவர் வீட்டில் டிவி இருக்கும், அவர்கள் வீட்டு பக்கத்தில் இருப்பவர்கள் எப்போதாவது நல்ல நிகழ்ச்சி போடும் போது மொத்தமாக அந்த வீட்டிற்குள் சென்று குடியேறி விடுவர், ஒரு கட்டத்திற்கு பின் அரசின் இலவச டிவி என்பது அனைத்து வீடுகளையும் ஆக்கிரமித்தது.
தற்போது டிவி இல்லாத வீடுகளே இல்லை, ஆனால் பழைய டிவிகள் எல்லாம் மாறி LED TV, Android TV, QLED TV என வித்தியாசம் வித்தியாசமாக டிவிகள் வந்து விட்டது, ஆனாலும் உழைப்பு எப்படி இருக்கும் என்ற கேள்விக்கு எந்த தற்போதைய டிவிகளும் பதில் தருவதில்லை, எல்லா டிவிகளும் குறைந்த பட்சம் ஒரு 3 ஆண்டுகள் உழைப்பதே பெரும் அதிசயமாக பார்க்கப்படுகிறது.
அந்த வகையில் LED TV ரிப்பேருக்கான மார்க்கெட் என்பது உலகளாவிய அளவில் 8 பில்லியன் டாலராக இருக்கிறது, பெரும்பாலும் LED TV ரிப்பேர் ஆகும் போது அதை ரிப்பேர் செய்ய டிவியின் விலையில் 70 சதவிகிதம் வரை வசூலிப்பதாக தகவல், இந்த ரிப்பேருக்கான செலவை குறைப்பதில் தான் ஒரு டிவி மெக்கானிக்கின் திறன் இருப்பதாக அறியப்படுகிறது.
ரிப்பேர் ஆனதும் LED TV யை தூக்கி எறியும் பலரும் அதை ரிப்பேர் செய்ய முடியாதா என்ற மனநிலையில் தான் தூக்கி எறிந்து புது டிவியை வாங்குகிறார்கள், அந்த வகையில் ரிப்பேருக்கான மார்க்கெட்டை மட்டும் பிடிக்க முடிந்தால், அந்த செக்சனுக்கான தொழிலில் ராஜாவாக வலம் வரலாம், சரியான மார்க்கெட் பகுதியில் மட்டும் ரிப்பேர் ஷாப் அமைந்து விட்டால் மாதம் ரூ 40,000 வரை வருமானம் பார்க்கலாம்.
" LED TV Repair தெரியாது என்றால் அதற்கான கோர்ஸ்கள் எல்லாம் இருக்கின்றன, இல்லையேல் வேலைக்கு ஆட்கள் வைத்தும் பார்க்கலாம், தரமான சேவையுடன் அதிகப்படியான மார்க்கெட்டை பிடிக்கும் போது இலட்சங்களில் கூட வருமானம் பார்க்க முடியும் "