Laundry Shop Ideas Tamil - லாண்டரி தொழிலில் வெறும் ரூபாய் 3,500 மட்டும் முதலீடு செய்து, தினம் ரூபாய் 1500 இலாபம் எப்படி பார்க்கலாம் என்பது குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
Laundry Shop Ideas Tamil - லாண்டரி தொழிலை பொறுத்தமட்டில் நீங்கள் வீட்டில் இருந்தே கூட செய்யலாம், விளம்பரத்திற்கு வீட்டிற்கு வெளியில் இங்கு அயன் செய்து தரப்படும் என்ற ஒரு போர்டு மட்டும் இருந்தால் போதுமானது, ஒரு கமெர்சியல் அயன் பாக்ஸ் ஒன்று வாங்கி வைத்துக் கொள்ளலாம், ஒரு நல்ல கமெர்சியல் அயன் பாக்ஸ் அதிகபட்சமாக ரூ 2500 முதல் 3500 வரை இருக்கும். நீங்கள் வீட்டில் இருந்து லாண்டரி தொழிலை பார்க்கும் பட்சத்தில் அந்த அயன் பாக்ஸ் ஒன்று தான் உங்களது முதலீடு.
கடையாக வைக்கும் பட்சத்தில் வாடகை, கரண்ட் பில் ஆகியவற்றை கருத்தில் கொள்ள வேண்டியது அவசியம், லாண்டரி தொழிலுக்கு பெரிய கடையாக இருக்க வேண்டும் என்பதெல்லாம் அவசியம் இல்லை, சின்ன 10*10 ரூம் கூட போதும், ஒரு நீளமான டேபிள், ஒரு சேர் உள்ளிட்டவைகள் இருந்தால் அயனிங்கிற்கு எளிதாக இருக்கும். கடை என்னும் போது நீங்கள் மக்கள் கூடும் இடத்தை தேர்வு செய்யும் போது வீட்டை விட அதிக துணிகள் அயனிங்கிற்கு வருவதற்கு அது வாய்ப்பாக அமையும்.
இதற்கு பெரிதாக படிக்க வேண்டியதோ, கற்றிருக்க வேண்டியதோ அவசியம் இல்லை, ஆனாலும் கூட அயன் பண்ணுவதற்கான ஒரு முன் அனுபவம் மட்டும் இருப்பது அவசியம், எந்த எந்த உடைகளுக்கு எந்த எந்த வெப்பத்தில் அயன் செய்ய வேண்டும் என்பதையும் தெரிந்து இருக்க வேண்டும், சில உடைகள் அதிக வெப்பத்தை தாங்காது, சில உடைகளை அதிக வெப்பத்தால் மட்டுமே அயன் செய்ய முடியும், அவ்வாறாக துணிகளை வகை பிரிக்க தெரிய வேண்டும்.
பொதுவாக சந்தைகளில் பட்டு வேஸ்டிகள், பட்டு சட்டைகள், சீலைகள் இவைகளுக்கு எல்லாம் அயன் செய்வதற்கு ரூபாய் 50 வீதம் வசூலிப்பார்கள், இதர சட்டைகள், பேண்டுகள் உள்ளிட்டவைகளை அயன் செய்வதற்கு 30 ரூபாய் வீதம் வசூலிப்பார்கள். என்ன தான் ஹெவி அயன் பாக்ஸ் என்றாலும் கூட ஒரு ஒன்றரை மணி நேரத்திற்கு ஒரு முறை ஒரு 15 நிமிடம் நிறுத்தி வைப்பது அவசியம், அயன் பாக்ஸ் போட்டு இருக்கும் எலக்ட்ரிகள் போர்டில் டிரிப்பர் இருப்பது அவசியம், அது உங்களது பாதுகாப்பிற்காக.
சரி, இலாபம் எப்படி இருக்கும்?
தினமும் ஒரு 50 துணிகள் என வருகிறது என வைத்துக் கொள்வோம், சராசரியாக ஒரு துணிக்கு 30 ரூபாய் என வைத்துக் கொண்டால் கூட தினசரி ரூ 1500 வீதம் கையில் இலாபம் பார்க்க முடியும், தினமும் 100 துணிகள் கூட அயன் செய்பவர்களும் இருக்கிறார்கள், லாண்டரி தொழிலை பொருத்தவரை அயன் பாக்ஸ்சிற்கு மட்டும் தான் முதலீடு என்பதால் அதற்கு அடுத்து உங்கள் கையில் வருவதெல்லாம் இலாபம் மட்டும் தான்.
" குறைந்த முதலீட்டில் நிறைந்த இலாபம் பார்க்க வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு லாண்டரி ஒரு அருமையான தொழில். இந்த தொழிலை ஒரு சிலர் மட்டமாக நினைக்கின்றனர், ஆனால் இன்று பாத்ரூம் கழுவும் ஒரு தொழிலையே கார்பரேட் நிறுவனம் வீடு வீடாக செய்து வருகிறது என்பதை யோசித்துக் கொள்ள வேண்டும் "