Kuzhambu Kadai Business Ideas Tamil - நல்ல இலாபம் தரும் வகையில் குழம்பு, கூட்டு கடை எப்படி வைப்பது என்பது குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
Kuzhambu Kadai Business Ideas Tamil - தற்போதெல்லாம் உலகம் ஓடிக் கொண்டே இருக்கிறது, யாருக்கும் வீட்டை எட்டி பார்க்க கூட நேரம் இல்லை, பலரும் வீட்டில் இருக்கும் நேரத்தை விட அலுவலகங்களிலும், நிறுவனங்களிலும் செலவிடும் நேரம் தான் அதிகம், அதனால் பலரும் உணவுகளை ஆன்லைன் தளங்களில் ஆர்டர் செய்து சாப்பிட்டுக் கொண்டு இருக்கின்றனர், விலை அதிகம் தான் என்றாலும் கூட சமைக்க நேரமின்மை ஒரு காரணமாக கூறப்படுகிறது.
சரி, அவர்களுக்காகவே ஒரு கடை ரெடி செய்யலாம் என கொண்டு வரப்பட்டது தான் இந்த குழம்பு கடை, தேவையானவை என்பது முதலில் நன்கு சமைக்க தெரிந்த ஒருவர், அது உங்கள் மனைவியாகவோ, அம்மாவாகவோ இல்லை யாரேனும் நல்ல சமைக்க தெரிந்தவராக கூட இருக்கலாம், அது போக ஒரு Food Warmer Container, கொஞ்சம் பாத்திரங்கள், கரண்டிகள் எல்லாம் வாங்கி வைத்துக் கொள்ள வேண்டும்.
Food Warmer எங்கும் கிடைக்கவில்லை என்றால் நேரடியாக கோயம்புத்தூர், ஈரோடு சென்று இறங்கி விடுங்கள், அங்கு நீங்கல் வைக்க போகும் கடைக்கு தேவையான அத்துனை பொருட்களையுமே மலிவான விலைக்கு வாங்கி விடலாம், காலையை விட்டு விடுங்கள், மதியம் சாம்பார், ரசம், மீன் குழம்பு, சிக்கன் கிரேவி, மட்டன் கிரேவி, புளிக்குழம்பு, மோர் குழம்பு, அவியல் கூட்டு, கோஸ் கூட்டு, உருளைக் கிழங்கு கூட்டு இதெல்லாம் செய்து Food Warmer யில் போட்டு வைத்து விட வேண்டும்.
இரவுக்கு என்றால் வெறும் கிரேவிகள், சப்பாத்தி குருமாக்கள், சாம்பார் இது மட்டுமே போதும், ரெடிமேட் சப்பாத்தி, ரெடிமேட் பரோட்டா பாக்கெட்டுகளும் வாங்கி வைத்துக் கொள்ளலாம், குழம்பு வாங்க வருபவர்கள் அதையும் வாங்கிச் செல்வார்கள், பொதுவாக சாம்பார், ரசம் ரூ 20 முதல் 30 வரை விற்கப்படுகிறது, கூட்டு வகைகள் ரூ 15 முதல் 20 வரை விற்கப்படுகிறது, அசைவ குழம்புகல் ரூ 40 முதல் 60 வரை விற்கப்படுகிறது.
ஒரு குழம்பு வாங்கினால் குறைந்த பட்சம் ஒரு மூன்று பேர் சாப்பிடும் அளவிற்கு இருக்கும், நீங்கள் மதியம் குழம்பு வாங்கி விட்டு, குக்கரில் 5 நிமிடத்தில் 3 விசில் வைத்து சாதம் வைத்து மதிய உணவை முடித்து விடலாம், இரவிற்கு குழம்பு கடையிலேய ரெடிமேட் சப்பாத்தியோ, பரோட்டாவோ வாங்கி விட்டு அங்கேயே குருமா அல்லது கிரேவி வாங்கி விட்டு இரவு உணவை முடித்து விடலாம்.
" குழம்பு கடையை பொறுத்தவரை நீங்கள் சுவையாக செய்யும் பட்சத்தில் வாடிக்கையாளர்கள் உங்களை விட்டு நீங்க மாட்டார்கள், தினசரி ரூ 2,500 முதல் 3,000 வரை வருமானம் பார்க்க முடியும், மாதம் ரூ 75,000 முதல் 90,000 வரை சம்பாதிக்க முடியும் "