• India

கருவாடு கடை...தயாரிப்பு தெரிந்தால் போதும்...மாதம் ரூ 30000 வரை வருமானம் பார்க்கலாம்...!

Karuvadu Business Plan

By Ramesh

Published on:  2025-01-06 16:33:09  |    471

Karuvadu Business Plan - முதலில் கருவாடு கடை ஏன் என்றால், மீன் என்பது அனைவருக்குமே பிடித்தமான ஒரு உணவாக கருதப்படுகிறது, அதிலும் எந்த வித கெமிக்கல்களும், எந்த வித பக்க விளைவுகளும் இல்லாமல் உடலுக்கு நன் ஊட்டச்சத்தை தரும் உணவு வகைகளுள் மீன் குறிப்பிடத்தக்க உணவாக பார்க்கப்படுகிறது, அந்த வகையில் கருவாடும் ஒரு ஆகச்சிறந்த உணவு வகைகளுள் ஒன்றாக பார்க்கப்படுகிறது.

பொதுவாக வீட்டில் மீன் குழம்பு என்றாலும், கருவாடு குழம்பு என்றாலும் கிட்டத்தட்ட மூன்று நாட்களுக்கு குழம்பு வைக்க தேவை இல்லை, காரணம் சுட வைத்து சுட வைத்து மூன்று நாட்களுக்கு சாப்பிடலாம், அதிலும் கருவாடின் சுவை என்பது நாள் அதிகரிக்க அதிகரிக்க அதிகமாகும், சரி அந்த வகையில் கருவாடு கடை எப்படி வைப்பது என்று பார்க்கலாம்.



பொதுவாக கருவாடு என்பது உலர்த்தப்பட்ட மீன் அவ்வளவு தான், ஒரு உணவோ பண்டமோ மீனோ அதை நன்கு சூரிய ஒளியில் உலர்த்தி உப்பிட்டு பதப்படுத்திடும் போது அதில் பாக்டீரியா, பூஞ்சை உள்ளிட்டவைகள் ஆக்கிரம்படாமல் நீண்ட நாட்கள் கெட்டு போகாமல் இருக்கும், அப்படித் தான் கருவாடும், நீங்களாக தயாரிக்க போகிறீர்கள் என்றால் மீன்களை துறைமுகங்களுக்கு நேரடியாக சென்று கொள்முதல் செய்து கொள்ளலாம்.

பின்னர் வெட்டி உலர்த்தி உப்பு போட்டு பதப்படுத்தி, மீன் மார்க்கெட்டுகள் அல்லது ஏதாவது மக்கள் அதிகம் கூடும் பகுதிகளில் கடையாகவோ அல்லது தள்ளு வண்டிகள் மூலமாகவோ விற்கலாம், 10 ரூபாய் பாக்கெட்டுகள் போட்டு மொத்த கடைகளுக்கும் கொடுக்கலாம், ஒரு சிறிய கடுவாடு கடை வைக்க குறைந்தபட்சம் ஒரு 25000 முதலீடு கையில் இருந்தால் போதும், 



கட்டா பாறை, தேங்காய் பாறை, மஞ்சபாறை, கடல் விரால், சீலா, தேடு, சுறா, பால் சுறா, சூரை, பெரும்செல்லா, வாளை, விளமீன் மற்றும் வாவல் போன்ற மீன்களை தனித்தனியாக வெட்டி பதப்படுத்தி கருவாடு செய்ய வேண்டும், மொத்தமாக குழப்பி துண்டு கருவாடு செய்தால் அதன் சுவை மாறி விடும், தொழில் நன்கு பிக் அப் ஆகும் பட்சத்தில் மாதம் ரூ 30000 வரை வருமானம் பார்க்கலாம்.

முறையான விற்பனைக்கான ஆவணங்கள், உணவு விற்பனைக்கான லைசென்ஸ், ஏற்றுமதிக்கான ஆவணம், GST எல்லாம் பதிவு செய்து வைத்து இருந்தால் வெளிநாடுகளுக்கும் உங்கள் கருவாடுகளை ஏற்றுமதி செய்ய முடியும், நீங்கள் முதலில் சிறியதாக சந்தைப்படுத்திவிட்டு உங்களுக்கு வாய்ப்பு அமையும் பட்சத்தில் ஏற்றுமதி குறித்து யோசிக்கலாம்.