• India
```

தொழில் தொடங்குபவர்களுக்கு ரூ. 3 லட்சம் வரை கடன்.. தமிழ்நாடு அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்புகள்!!

Kalaignar Kaivinai Thittam Scheme

By Dhiviyaraj

Published on:  2025-01-26 12:44:54  |    769

தொழில்முனைவோராக வளர விரும்புவோருக்கு அரசும், மாநிலங்களும் பல்வேறு உதவித் திட்டங்களை செயல்படுத்தி வருகின்றன.

தொழில்முனைவோராக வளர விரும்புவோருக்கு அரசும், மாநிலங்களும் பல்வேறு உதவித் திட்டங்களை செயல்படுத்தி வருகின்றன. குறிப்பாக கைவினைத் தொழிலாளர்களுக்கு ஆதரவாக தமிழக அரசு ‘கலைஞர் கைவினைத் திட்டம்’ என்ற புதிய உதவித் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

‘கலைஞர் கைவினைத் திட்டம்’ – முக்கிய அம்சங்கள்:

ஒன்றிய அரசின் ‘விஸ்வகர்மா’ திட்டத்திற்கு மாற்றாக தமிழக அரசு இந்த திட்டத்தை செயல்படுத்துகிறது.

தமிழ்நாட்டைச் சேர்ந்த கைவினை கலைஞர்களுக்கு தொழில்முனைவு ஆதரவு வழங்குவதே இதன் நோக்கம்.

இந்த திட்டத்தின் மூலம்  ரூ. 3 லட்சம் வரை கடனுதவி கிடைக்கும். 25% மானியம் (அதிகபட்சம் ரூ. 50,000) வழங்கப்படும். மேலும்  5% குறைந்த வட்டி விகிதத்தில் கடன் உதவி கிடைக்கும்.அதுமட்டுமின்றி தொழில் வளர்ச்சிக்கு தேவையான பயிற்சி, பொருட்கள் மற்றும் நிதி உதவிகள் கிடைக்கும்.

இந்த திட்டம் கைவினைத் தொழிலாளர்களுக்கு நிதி மற்றும் வளர்ச்சியில் உறுதுணையாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.