Kadalai Kadai Ideas - பொதுவாக கடலை கடை என்பது அந்த காலக்கட்டங்களில் கிராமங்களின் தின்பண்டக்கடையாக அறியப்படுகிறது, பெரும்பாலும் விலாஸ் என்ற பெயர்களில் இருக்கும், பொறிகடலை, மசால் கடலை, வறுத்த வேர்கடலை, மசால் பொறிகடலை, வறுத்த பட்டாணி என வறுத்த கடலை தின்பண்டங்கள் அனைத்தும் அந்த கடைகளில் கிடைக்கும்.
பெரும்பாலும் அந்த காலக்கட்டத்தில் வேலை முடித்து விட்டு வரும் ஊழியர்கள் விலாஸ் கடலை கடைகளில் தான் வீட்டிற்கு தேவையான தங்களது குழந்தைகளுக்கு தேவையான தின்பண்டங்களை வாங்கி செல்வர், சரி இந்த காலக்கட்டத்தில் இந்த கடலை கடைகளுக்கு ஒரு சந்தை மதிப்பு இருக்கிறதா என்றால் நிச்சயம் இருக்கிறது என்று தான் சொல்ல வேண்டும்.
முதலில் கடலை கடை நல்ல சந்தை பகுதிகளில் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் இருக்க வேண்டும், கடையை பஞ்சாயத்துகள் அல்லது நகராட்சிகளில் லைசென்ஸ் எடுத்து ஆவணப்படுத்திக் கொள்வது அவசியம், ஒரு கடலை மாஸ்டர் வைத்துக் கொள்வது அவசியம், அவரை பகுதி நேரமாகவோ முழு நேரமாக மாஸ்டராக நியமிக்கலாம்.
பொதுவாக ஒரு பொறிகடலை மொத்த விலைக்கு வாங்கும் போது கிலோ 85 ரூபாய்க்கு வாங்கலாம், அதையே வறுத்து விற்கும் போது கிலோ ரூ 160 முதல் 180 வரை சந்தைகளில் விற்கலாம், சில்லறை விலைக்கு ரூ 200 வரை விற்கிறார்கள், 50 கிராம், 100 கிராம், 1 கிலோ பாக்கெட்டுகளாக போட்டு மொத்த கடைகளுக்கும் விற்பனைக்கு கொடுக்கலாம்.