• India

இட்லி பொடி தயாரிப்பு...வீட்டில் இருந்தே மாதம் ரூ 15,000 வரை வருமானம்...!

Idli Podi Business Ideas

By Ramesh

Published on:  2024-12-19 19:29:22  |    637

Idli Podi Business Ideas - பொதுவாக இட்லி பொடி தயாரிப்பு என்பது பெண்களுக்கு எளிதான தயாரிப்பு முறை தான், வீட்டில் இட்லி பொடி தயாரித்து வைத்து சட்னி மற்றும் சாம்பார் வைக்க முடியாத சமயங்களில் இட்லி பொடியை பயன்படுத்துவர், ஆனால் அதே இட்லி பொடியை விற்பதன் மூலம் ஒரு குறிப்பிட்ட வருமானம் பார்க்க முடியும், அது எப்படி என்பது குறித்து பார்ப்போம்.

பொதுவாக வீட்டில் ஒரு விதமாக இட்லி பொடி செய்வார்கள், ஆனால் அதையே கொஞ்சம் வித்தியாசப்படுத்தி எள் இட்லி பொடி, வறுத்த அரிசி இட்லி பொடி, உளுந்தம் இட்லி பொடி, முருங்கை இட்லி பொடி, பூண்டு மிளகாய் பொடி என பல வகைகளில் இட்லி பொடிகளை தயார் செய்ய முடியும், இதை ஒரு குடிசைத் தொழிலாக பெண்களோ ஆண்களோ வீட்டில் இருந்தே கூட செய்யலாம்.



உணவு பாதுகாப்பு துறையிடம் லைசென்ஸ் வாங்கி விடும் பட்சத்தில் ஈ காமர்ஸ் மூலம் அமேசான், ப்ளிப்கார்ட்டில் கூட விற்பனை செய்யலாம், முதலீடு என்பதை பொறுத்தவரை ஒரு நல்ல மிக்ஸி, இது போக இட்லி பொடிக்கான மூலப் பொருள்கள், இவ்வளது தான் செலவு என்பது, இது போக பாட்டில்கள் 100 கிராம், 200 கிராம் பாட்டில்கள் மொத்தமாக கொள்முதல் செய்து வைத்துக் கொள்ளலாம்.

வீட்டில் அருகே இருப்பவர்களுக்கும், வீட்டின் அருகே இருக்கும் கடைகளுக்கும் மட்டும் சப்ளை செய்தால் கூட ஓரளவிற்கு இட்லி பொடி நல்ல வியாபாரம் ஆகும், பாக்கெட்டுகள் போட்டு அட்டைகளில் பின் செய்தும் கடைகளுக்கு கொடுக்கலாம், வீட்டில் இருந்தே ஏதாவது தொழில் செய்ய நினைக்கும் பெண்களுக்கு சிறிய முதலீட்டில் ஓரளவிற்கு இத்தொழில் இலாபம் தரும்.

" சராசரியாக மாதம் ரூ 15,000 முதல் 18,000 வரை இத்தொழிலின் மூலம் வருமானம் பார்க்கலாம், உணவு பாதுகாப்பு துறை லைசென்ஸ், ஈ காமர்ஸ் மூலம் விற்பனை, ஹோட்டல்களிடம் ஒரு இணக்கம் என விற்பனையை விரிவாக்கினால் இன்னும் அதிகமாக வருமானம் பார்க்க முடியும் "