Idiyappam Shop Ideas Tamil - பொதுவாக மக்கள் தற்போதெல்லாம் காலையும் இரவும் சாப்ட் புட்களை அதிகம் நாடி உண்ண விரும்புகிறார்கள், அதாவது எளிதாக செரிமானம் ஆக கூடிய வகையில் இட்லி, இடியாப்பம் போன்றவற்றை அதிகம் தேடுகிறார்கள், அந்த வகையில் வித விதமான இடியாப்பங்களை சந்தைப்படுத்துவதன் மூலம் எப்படி சம்பாதிக்க முடியும் என்பது குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
பொதுவாக இடியாப்ப கடை வைப்பதற்கு ஒரு தள்ளுவண்டியுடன் கூடிய அடுப்பு இணைப்பு, இட்லி சட்டி, போதுமானது, நீங்கள் கடையாக வைக்கபோகிறீர்கள் என்றால் கடையை நகராட்சிகளில் ஆவணப்படுத்திக் கொள்ளுங்கள், நல்ல சந்தைகள், நிறைய வீடுகள் இருக்கும் பகுதிகளில் கடையோ, தள்ளு வண்டியோ இருப்பது நிச்சயம் அவசியம், ரோடு சைடுகளில் இடியாப்பம் அவ்வளவாக ஓடாது.
அரிசி மாவு இடியாப்பம், கோதுமை மாவு இடியாப்பம், ராகி மாவு இடியாப்பம் என சத்தான மாவுகளில் இடியாப்பங்களை வெரைட்டி வெரைட்டியாக செய்யலாம், தொட்டுக் கொள்ள திருகிய தேங்காய் பூவும், இனிப்பு சேர்த்த தேங்காய் பாலும் கொடுத்தால் காம்பினேசன் கச்சிதமாக இருக்கும், பொதுவாக சந்தைகளில் ஒரு பெரிய சைஸ் இடியாப்பம் ரூ 10 முதல் 15 வரை விற்கப்படுகிறது.
ஹோட்டல்களில் 20 ரூபாய்க்கும் விற்கிறார்கள், பெரியவர்கள் சிலர் குருமா தொட்டு சாப்பிடவும் நினைப்பார்கள், ஆதலால் குருமாவும் கொஞ்சம் வைத்துக் கொள்வது நல்லது, காலை 6 மணிக்கு ஆரம்பித்து 10 மணிக்குள் கடையை முடித்து விடலாம், தினசரி ஒரு 40 முதல் 70 வாடிக்கையாளர்களை அணுக முடிந்தால் மாதம் சராசரியாக ரூ 30,000 வரை இடியாப்ப கடையின் மூலம் வருமானம் பார்க்கலாம்.