• India
```

ஐஸ் கட்டி தயாரிப்பு...மெசினுக்கு மட்டும் முதலீடு செய்தால்...மாதம் ரூ 30000 வரை வருமானம் பார்க்கலாம்...!

Ice Cube Making Business Ideas

By Ramesh

Published on:  2025-01-23 11:56:11  |    561

Ice Cube Making Business Ideas - ஐஸ் கட்டி தயாரிப்பில் ஈடுபடுவதன் மூலம் எவ்வாறு ஒரு குறிப்பிடத்தக்க வருமானம் ஈட்டுவது என்பது குறித்து பார்க்கலாம்.

Ice Cube Making Business Ideas - சரி முதலில் ஐஸ் கட்டிக்கான சந்தைகள் என்ன என்ன என்பது குறித்து முதலில் பார்க்கலாம், பொதுவாக் ஐஸ்கட்டிகள் ஜுஸ் தயாரிப்பிற்கும், கரும்புச்சாறு கடைகளில் மட்டுமே பார்த்து இருப்போம் ஆனால் அதன் தேவை அங்கு மட்டும் அல்ல, பல தொழிற்சாலைகளில் பதப்படுத்தியாகவும், மீன்களை பதப்படுத்தவும், ஒரு சில துறை முகங்களில் விற்பனைக்கும் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

சரி இந்த ஐஸ்கட்டியை எப்படி தயாரிப்பது என கேட்டால், அதற்கு என்று தனியாக வணிக ப்ரீசர்கள் இருக்கின்றன, கோயம்புத்தூர், ஈரோடு உள்ளிட்ட பகுதிகளில் இருக்கும் மெசினரிகள் தயாரிக்கும் நிறுவனங்களில் மலிவு விலையில் கிடைக்கும், மெசின் தயாரிக்கும் ஐஸ்கட்டியை பொறுத்து அதன் விலை இருக்கும், ரூ 10,000 முதல் 1 இலட்சம் வரையில் கூட இந்த மெசின்கள் சந்தைகளில் கிடைக்கின்றன,



சரி இந்த ஐஸ்கட்டியை எங்கு சந்தைப்படுத்தலாம் என கேட்டால், மீன் பிடி துறைமுகங்கள், ஜூஸ் கடைகள், உணவுகள் மீன்களை பதப்படுத்தும் இடங்கள் ஆகிய சந்தைகளில் எல்லாம் இந்த ஐஸ்கட்டியை சந்தைப்படுத்தலாம், சிறிய முதலீடு செய்து உங்கள் ஊர்களுக்கு உள்ளாகவே சந்தைப்படுத்துகிறார்கள் என்றால் குறைந்த கெபாசிட்டி கொண்ட மெசின்களை வாங்கினால் போதும்,

மிகப்பெரிய அளவில் சந்தைப்படுத்த நினைக்கிறீர்கள் என்றால் மீன் பிடி துறைமுகங்கள், மீன் விற்பனையாளர்கள், பதப்படுத்தும் நிறுவனங்கள் என பெரிய மெசின்களில் முதலீடு செய்து மிகப்பெரிய அளவில் சந்தைப்படுத்தலாம், சந்தைகளை பெரிதாக்கும் போது, வருமானத்தையும் அதிகரித்திட முடியும், குறைந்த பட்சம் ரூ 20,000 முதல் அதிக பட்சம் ரூ 50,000 வரை இத்தொழில் வருமானம் பார்த்திட முடியும்.

" உங்களின் தயாரிப்பின் அளவு மற்றும் சந்தைப்படுத்தும் அளவை பொறுத்து உங்களது வருமானம் இருக்கும் "