Fried Fish Shop Ideas - தற்போதெல்லாம் மக்கள் ஆடு, கோழிகளை விடுத்து பெரும்பாலும் மீனுக்கு மாறி வருகின்றனர், அதற்கு காரணம் என்னவென்றால் கோழி, ஆடுகள் சத்து மிகுந்த ஆதாரம் ஆக இருந்தாலும் கூட, தற்போது அதன் வளர்ப்பு என்பது இயற்கையோடு இணைந்து இல்லை, கிட்டதட்ட ஒரு செயற்கையான முறையில் வேகமான வளர்ப்பில் தான் ஆடு கோழிகளை பண்ணைகளில் வைத்து வளர்த்து வருகின்றனர்.
புல் மேய்ந்த ஆடுகள், நாட்டு கோழி வகைகள் எல்லாம் தற்போது பார்ப்பது என்பது மிக கடினம், அந்த வகையில் மீன் என்பது கொஞ்சம் இயற்கையோடு ஒன்றிணைந்த உணவாக பார்க்கப்படுகிறது, ஆடு, கோழிகளில் கிடைக்கும் பல சத்துக்கள் மீன்களிலும் கிடைக்கின்றன, இன்னும் அதிகமாகவே கிடைக்கின்றன என்று சொல்லலாம், அந்த வகையில் ஒரு பொறித்த மீன் கடை எப்படி வைப்பது என்பது குறித்து பார்க்கலாம்.
பொறித்த மீன் வகைகளில் நல்ல இலாபம் தரக்கூடியது என்பது சாளை மீன் தான், இன்னொன்று அது எப்போதுமே சந்தைகளில் கிடைக்கும் மீன் வகைகளில் ஒன்றாக இருக்கிறது, ஒரு 400 ரூபாய்க்கே 200 நல்ல பெரிய சாளை மீன்களை அள்ளி விடலாம், வாரத்திற்கு 5 நாள்கள் வீதம், மாலை ஒரு 6 முதல் 9 வரை ஏதாவது சந்தைகளில் அல்லது பீச் அருகில் தள்ளு வண்டி கடையாக போடலாம்.
பொதுவாக ஒரு பிளேட் பொறித்த சாளை மீன் என்பது ரூ 30 முதல் 40 வரை விற்கிறார்கள், ஒரு பிளேட்டுக்கு 3 பொறித்த மீன்கள் வைப்பார்கள், நாள் ஒன்றுக்கு ஒரு 40 முதல் 50 பிளேட் விற்றாலும் கூட, தினசரி ரூ 1200 முதல் 1500 வரை வருமானம் பார்க்கலாம், வாரத்திற்கு 5 நாள் வீதம் மாதம் முழுக்க கடை போட்டால் சராசரியாக ரூ 15,000 முதல் 20,000 வரை வருமானம் கையில் நிற்கும்.