How To Start Exam Coaching Center - பெரிதாக எந்த முதலீடும் செய்யாமல் திறமையை மட்டுமே மூலதனமாக வைத்து போட்டி தேர்வுகளுக்கான கோச்சிங் சென்டர் துவங்குவது எப்படி என்பது குறித்து பார்க்கலாம்.
How To Start Exam Coaching Center - தற்போது தேசத்தில் இருக்கும் ஒரு சாதாரண சூழ்நிலை என்பது, ஒரு அரசு வேலைக்கு ஆள் எடுக்கப்படுகிறது என்ற அறிவிப்பு வெளியானால், அந்த ஒரு வேலைக்கு கிட்டதட்ட 1 இலட்சம் பேர் அப்ளை செய்கின்றனர், இது மிக மிக கம்மி தான், அந்த அளவிற்கு அரசு வேலைக்கான போட்டி என்பது தேசத்தில் நிலவி வருகிறது, சரியான வழிகாட்டுதலுடன், செயல்படுபவர்களே அரசு போட்டி தேர்வுகளில் வெற்றி பெறுகின்றனர்.
ஒரு காலத்தில் அரசு வேலைவாய்ப்புகளில் நேரடி வேலை வாய்ப்பு முறை அமலில் இருந்தாலும் கூட தற்போதெல்லாம் அது சாத்தியமில்லை, முதலில் போட்டித் தேர்வுகள், பின்னர் நேர்காணல், அதற்கு பின்னர் சர்ட்டிபிகேட் வெரிபிகேசன், மருத்துவ செக் அப் என பல பிராசஸ்கள் இருக்கிறது, அனைத்திலும் தேர்வானால் மட்டுமே அரசு வேலை என்பது ஒருவருக்கு உறுதி ஆகும்.
இதில் முக்கியமான கட்டம் என்பது போட்டி தேர்வு தான், பொதுவாக உங்களுக்கு போட்டி தேர்வு அனுபவம் இருந்தால், அதை நோக்கி செல்பவர்களுக்கு ஒரு வழிகாட்டியாக கோச்சிங் சென்டர் ஆரம்பிக்கலாம், பொதுவாக மற்ற கோச்சிங் சென்டர்கள் ஒரு மாணவருக்கு ஒரு மாநில போட்டி தேர்வுக்கு பயிற்சி அளிக்கவே கிட்டதட்ட ரூ 30,000 முதல் 50,000 ரூபாய் வரை வசூலிக்கிறார்கள்.
சேவை மனப்பான்மையோடு செய்ய நினைத்தால் ஒரு மாணவருக்கு ரூ 7000 முதல் ரூ 10,000 வரை கட்டணம் நிர்ணயம் செய்யலாம், பயிற்சி காலம் 4 மாதம் முதல் 6 மாதம் நிர்ணயிக்கலாம், ஒரு 4 பேரை பயிற்சிக்கு பகுதி நேர ஆசிரியர்களாக நிர்ணயிக்கலாம், ஒரு மாதத்திற்கு ஒரு 30 மாணவர்கள் உங்கள் பயிற்சி மையத்தில் சேர்ந்தால் கூட மாதம் ரூ 3,00,000 வருமானம் வரும்.
" சம்பளம் 80,000 ரூபாய், புத்தகங்கள் அச்சடிக்க ஒரு 50,000 ரூபாய், இதர செலவுகள் ஒரு 20,000 ரூபாய் என வைத்துக் கொண்டால் கூட கையில் மாதம் 1.5 இலட்சம் நிற்கும் "