• India
```

பெண்கள் வீட்டில் இருந்தே செய்ய கூடிய வகையில்...சின்ன சின்ன தொழில்கள் குறித்து பார்க்கலாம்...!

Housewives Business Ideas in Tamil​

By Ramesh

Published on:  2024-11-12 21:13:04  |    1996

Housewives Business Ideas in Tamil​ - வீட்டில் இருந்தே பெண்கள் செய்ய முடிகின்ற சின்ன சின்ன தொழில்கள் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

Housewives Business Ideas in Tamil​ - பொதுவாக பெண்கள் வீட்டில் இருக்கும் வேலைப்பளுவால் வெளியில் எந்த வேலைக்கும் செல்ல முடியாத நிலை இருக்கிறது, ஆனாலும் கூட ஒரு சில பெண்களுக்கு ஏதாவது செய்து வருமானம் ஈட்ட வேண்டும் என்ற ஆசை இருக்கிறது, அந்த வகையில் பெண்கள் வீட்டில் இருந்தே செய்யக்கூடிய வகையில் இருக்கின்ற சின்ன சின்ன தொழில்கள் குறித்து பார்க்கலாம்.

1) பேக்கிங் தொழில்



பேக்கிங் தொழிலை நீங்களாகவும் செய்யலாம், இல்லையேல் மொத்த கடைகளுக்கு செய்தும் கொடுக்கலாம், 5 ரூபாய் கடலை வகை பாக்கெட்டு அட்டைகள், பேரீச்சம் பழம், அப்பள பொறிகள், சீனி, உளுந்து, துவரம் பருப்பு உள்ளிட்டவைகளை கடைக்காரர்கள் உங்கள் வீடுகளில் வந்து கொடுப்பார்கள், நீங்கள் அதை உங்களுடைய ப்ரீ டைம்களில் செய்து கொடுக்கும் போது மாதம் ரூ 10,000 முதல் 15,000 வரை வருமானம் கிட்டும்.


2) சொந்தமாக எதாவது செய்து பக்கத்து வீடுகளில் விற்றல்



ஒரு சிலர் சொந்தமாக ஊறுகாய், இட்லி பொடி, மசால் பொடிகள், ஆயுர்வேத ஹெர்பல் பிராடக்டுகள், சீயக்காய்கள் உள்ளிட்டவைகளை அவர்களே தயாரித்து பக்கத்து வீடுகள், பக்கத்து தெருக்களில் இருப்பவர்களுக்கு விற்று அதன் மூலம் மாதம் ரூ 12,000 முதல் ரூ 15,000 வரை வருமானம் பார்க்க முடியும், அந்த வகையில் நீங்கள் தயாரிக்கும் சொந்தமான தயாரிப்புகளுக்கு எப்போதுமே நல்ல மவுசு இருக்கும்.

3) இட்லி மாவு அரைத்தல்



பொதுவாக தமிழகம் முழுக்கவே காலையும் இரவும் இன்று இட்லி தோசை தான் ஓடிக்கொண்டு இருக்கிறது, யாரும் வீட்டில் அரைத்து இட்லி தோசைகள் சுடுவதே இல்லை, எல்லாமே கடைகளிலும், மாவு அரைக்கும் வீடுகளிலும் தான் வாங்குகிறார்கள், அந்த வகையில் வீட்டில் இருந்தே இட்லி மாவு அரைத்து விற்பதன் மூலம் குறைந்த பட்சம் மாதம் 20,000 முதல் 25,000 ரூபாய் வரை வருமானம் பெற முடியும்.

4) டெய்லரிங் & ஆரி வொர்க்



பெரும்பாலும் பெண்கள் பொதுவாக வீட்டில் இருந்தே செய்யும் தொழில் என்றால் அது டெய்லரிங் மற்றும் ஆரி வொர்க் தான், பெண்களுக்குரிய ஆடைகள், சட்டை தைத்தல், பிடித்து தைத்தல், கல்யாண சட்டைகள் தைத்தல், ஆரி வொர்க் செய்து தைத்து கொடுத்தல் போன்றவைகளின் மூலம் குறைந்தபட்சம் மாதம் 20,000 ரூபாய் முதல் 25,000 ரூபாய் வரை சம்பாதிக்க முடியும்.