Housewife Business Ideas in Tamil - வெளியில் வேலைக்கு செல்ல முடியாத பெண்களுக்கு அவர்களின் தினசரி செயல்பாடுகளை எப்படி யூடியூப் கன்டன்ட்களாக மாற்றுவது என்பது குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
Housewife Business Ideas in Tamil - பொதுவாக பல பெண்களுக்கும் திருமணம் ஆனதும் வேலைக்கு செல்ல முடியாத சூழல் ஒன்று உருவாகி விடுகிறது, காரணம் வீட்டில் இருக்கும் வேலைப்பளு, குழந்தைகளை கவனித்துக் கொள்வது, சமையல் வேலை என்று பல பொறுப்புகள் மேலோங்கி விடுவதால் வீட்டை விட்டு வெளியே கூட வர முடியாத நிலை ஏற்பட்டு விடுகிறது, ஆனாலும் அவர்களுக்கு ஒரு வேலை, சம்பாத்தியம் என்ற ஆசைகள் இருக்க தான் செய்கிறது.
அதனால் பல பெண்களும் வீட்டில் இருந்தே செய்ய முடிகின்ற ஏதாவது ஒரு வேலையை தேடிக் கொண்டு இருக்கின்றனர், ஒரு சில தொழில் நுட்ப நிறுவனங்கள் வீட்டில் இருந்து பணி புரிய அனுமதித்தாலும் கூட தற்போது இருக்கும் சூழலில் குறைந்த பட்சம் 3 நாட்களாவது அலுவலகத்தில் வந்து வேலை செய்ய பணிக்கின்றனர், அதனால் அவ்வாறாக பணி புரிபவர்களுக்கும் சிக்கல் இருக்க தான் செய்கிறது.
சரி என்ன தான் செய்யலாம் என்றால் உங்களுக்காகவே இருக்கிறது டிஜிட்டல் கன்டன்டுகள், இதற்காக தனியாக நேரம் ஒதுக்க முடியாதே என்றால் உங்கள் தினசரி செயல்பாடுகளையே கன்டன்டுகள் ஆக்கி விடுங்கள், தினசரி மூன்று முறை சமையல் செய்கிறீர்கள் என்றால் மூன்று சமையல் கண்டன்டுகள், இதை பதிவு செய்ய ஒரு நல்ல மொபைலும், ஒரு ஸ்டிக்கும் இருந்தால் மட்டுமே போதுமானதாக இருக்கும்.
இன்றைய ஜெனரேசன்கள் டீ போடுவதை முதற்கொண்டு யூடியூபில் தான் தேடுகிறார்கள், அந்த வகையில் சமையல் கன்டன்டுக்கு என்றுமே மவுசு அதிகம், அதே சமயத்தில் லாங் டர்ம் ஆகவும் வியூஸ் வரும், இன்னொன்று நீங்கள் பயன்படுத்தும் ஏதாவது ஹெல்த்கேர் பிராடக்டுகளுக்கு ரிவ்யூ போடலாம், ஏதாவது ஆயுர்வேதிக் ஹெல்த்கேர் பிராடக்டுகளின் தயாரிப்புகள் பற்றி தெரிந்ததை கூறலாம்.
இது அனைத்தையும் நீங்கள் வீட்டில் இருந்தே செய்ய முடியும், பொதுவாக சமையல் வேலை முடிந்ததும் கொஞ்சம் ஓய்வு கிடைக்கும், அந்த சமயங்களில் நீங்கள் எடுத்த வீடியோக்களை எடிட்டிங் செய்து அப்லோட் செய்ய பயன்படுத்திக் கொள்ளலாம், வீடியோவும் கண்டண்டும் தரமாக இருக்கும் பட்சத்தில் உங்களது யூடியூப் சேனலுக்கு ஆட்டோமேட்டிக்காகவே பயனாளர்கள் வர ஆரம்பித்து விடுவார்கள்.
பெரிதாக எந்த முதலீடும் தேவைப்படாது, சேனல்களை பொறுத்தவரை கொஞ்சம் டெவலப் ஆக டைம் எடுக்கும், அதுவுமே உங்களது கன்டன்ட் தரமாக இருந்தால் குறுகிய காலத்திற்கும் நிறைய ரீச்களை பெற முடியும், இதன் மூலம் நல்ல வருமானமும் பார்க்க முடியும், வீட்டில் இருந்தே பணி புரிய நினைக்கும் பெண்களுக்கு, யூடியூப் ஒரு அட்டகாசமான வருமானம் வரும் தளம் ஆகும்.