Halwa Shop Ideas - பொதுவாக சாயங்காலம் நேரம் என்பது அனைவரும் பண்டங்களை தேடும் நேரம், வடை, பஜ்ஜி, பப்ஸ், டீ என்று ஏதாவது ஒரு பண்டங்களை தினசரி தேடிக் கொண்டே செல்வர், அந்த வகையில் ஹல்வா மிக்ஸர் என்பது தின்பண்டத்திற்கு ஒரு பெஸ்ட் காம்பினேசனாக இருக்கும், திருநெல்வேலி ரத வீதிகளில் சூடான ஹல்வா மற்றும் மிக்ஸர் சாயங்கால நேரங்களில் மிகவும் பேமஸ்.
இதற்கு பெரிய முதலீடுகள் எல்லாம் தேவையில்லை, ஹல்வா செய்ய தெரிந்திருக்க வேண்டும், மிக்ஸர் கடைகளில் வாங்கிக் கொண்டால் போது, பிளேட்களுக்கு பதில் வாழை இலை பயன்படுத்திக் கொண்டால் சூடான ஹல்வாவுடன் அந்த இலை வாடையும் இன்னும் சுவை கொடுக்கும், பெரும்பாலும் ஹல்வா என்பது பெரும் இனிப்பு வகை, அந்த இனிப்பு சாப்பிட்ட பின்பும் நாவிலேயே நிற்கும்.
அதற்காக திருநெல்வேலி பகுதிகளில் ஹல்வா சாப்பிடும் போது கடைசியாக ஒரு பிடி மிக்ஸரும் கொடுப்பது உண்டு, அந்த இனிப்பை அது நாவில் இருந்து எடுத்து விடும் என்பதற்காக, ஆனால் அதுவே ஒரு பெஸ்ட் காம்பினேசனாக நாளடைவில் மாறி விட்டது, ஹல்வாவை பொறுத்தவரை 25 ரூபா பிளேட், 40 ரூபா பிளேட் என வகைப்படுத்தி பொதுவாக விற்பார்கள், அதில் வித்தியாசம் ஒன்றும் இல்லை, அளவு மட்டும் மாறும்.
சாயங்காலம் ஒரு 4 மணிக்கு துவங்கி 7 மணி வரை ஹல்வா மிக்ஸர் கடை ஓடும், குறிப்பாக அலுவலகம், பள்ளிகள் முடியும் நேரம் அது என்பதால் அது தான் அந்த விற்பனைக்கு பீக் டைம், கடையாக வைக்க வேண்டும் என்பது அவசியம் இல்லை, ஒரு டேபிள் மட்டும் இருந்தால் கூட போதும், ஒரு நாளைக்கு ஒரு 40 வாடிக்கையாளர்களை அனுகினால் கூட மாதம் சராசரியாக ரூ 20000 வரை வருமானம் கையில் நிற்கும்.