• India

வீட்டில் இருந்தே பூ கட்டி விற்பனை...மாதம் ரூ 8000 முதல் 10000 வரை வருமானம்...!

Flower Business From Home

By Ramesh

Published on:  2025-01-02 15:41:48  |    764

Flower Business From Home - பொதுவாக வீட்டில் பெண்களுக்கு தாங்களும் ஏதாவது தொழில் செய்து குடும்பத்திற்கு வருமானம் ஈட்ட வேண்டும் என்ற ஆசை இருக்கும், ஆனாலும் அது வெகுவான பெண்களுக்கு கை கூடுவதில்லை, காரணம் அவர்களுக்கு வீட்டை தாண்டி வெளியில் எங்கும் செல்ல முடியாத நிலை இருக்கும், வீட்டில் இருக்கும் வேலை போக கொஞ்ச நேரம் மட்டுமே மிச்சமும் இருக்கும்.

அந்த வகையில் வீட்டில் இருந்தே ஒரு சிறிய நேரத்தில், கொஞ்சமாக வருமானம் தரும் பூ கட்டி விற்பனை என்பது குறித்து பார்க்கலாம், பொதுவாக பெண்களுக்கு பூ கட்ட தெரிந்திருக்கும், வீட்டில் இருந்து பூ கட்டி விற்கும் போது மல்லி மற்றும் பிச்சி பூக்களை விற்கலாம், பிச்சி பூக்களை உங்கள் வீட்டில் மாடி இருந்தால் தொட்டி வைத்து கூட வளர்க்கலாம், பிச்சி வீட்டிலேயே வளரும் தன்மையுடையது தான்.



மல்லியை பொறுத்தவரை அருகில் இருக்கும் ஏதாவது மொத்த விலை பூ சந்தைகளில் ஒரு ஒரு கிலோ அல்லது அரை கிலோ போல வாங்கி வைத்துக் கொள்ளலாம், கட்டி தண்ணீர் தெளித்து ஒரு கவருக்குள் வைத்து, ஒரு டப்பாவுக்குள் மூடி பிரிட்ஜ்க்குள் வைத்துக் கொள்ளலாம், நீண்ட நேரம் தாக்கு பிடிக்கும், ஒரு சிறிய ஸ்லேட்டில் இங்கு பூ கிடைக்கும் என வீட்டிற்கு வெளியே ஒரு போர்டு வைத்தால் போதும்,

வீட்டிற்கு அருகில் இருப்பவர்களே தினம் தினம் உங்களிடம் பூக்களை வந்து வாங்கும் சூழல் ஏற்படும், வேலைக்கு செல்லும் பெண்கள், விழா நிகழ்வுகளுக்கு உங்களிடம் பூ வாங்கி செல்வர், இது போக ஒரு சில வைபவங்களுக்கு ஆர்டர் எடுத்து பூ கட்டிக் கொடுக்கலாம், சிறிய தொழில் தான் என்றாலும் கூட உங்கள் வீட்டிற்கு இதன் மூலம் மாதம் ரூ 10000 வரை வருமானம் ஈட்டிக் கொடுக்க முடியும்.

" அதற்கு மேலும் வருமானம் ஈட்ட முடியும், எல்லாம் தொழிலில் உங்களது திறன் மற்றும் சாமர்த்தியத்தை பொறுத்தது தான் "