• India

பூங்கொத்து தயாரிக்கும் தொழில்...மொட்ட மாடி இருந்தா போதும்...சிறிய முதலீட்டில் அதிக இலாபம்...!

Flower Bokeh Business Plan

By Ramesh

Published on:  2025-01-01 16:52:39  |    776

Flower Bokeh Business Plan - பொதுவாக என்ன விழா வந்தாலும், ஏதேனும் பெர்சனலான வாழ்த்துகளாக இருந்தாலும் எதாவது கிப்ட் கொடுக்க வேண்டும் என்பது வழக்கம் ஆகவே ஆகிவிட்டது, அந்த வகையில் ஒவ்வொருவரும் ஒவ்வொருவருக்கு பிடித்த கிப்ட் ஆக கடைகளுக்கு சென்று வாங்கி கொடுக்கின்றனர், ஆனாலும் மனதுக்கு நெருக்கமான கிப்டில் ஒன்றாக இந்த பூங்கொத்து (Flower Bokeh) எப்போதும் இருக்கிறது.

பொதுவாக பெண்களுக்கு நெருக்கமான கிப்ட் ஆக இந்த பூங்கொத்து இருக்கிறது, ஒரிரு நாளில் வாடிப்போகும் என்றாலும் கூட, அது மனதில் ஏற்படுத்தும் அதிர்வலையும், நினைவலையும் அதிகம் என்பது அனைவரும் அறிந்ததாக இருக்கிறது, அந்த வகையில் அந்த பூங்கொத்து தயாரிப்பை கையில் எடுத்து ஒரு குறிப்பிடத்தக்க வருமானம் எப்படி பார்ப்பது என்பது குறித்து பார்க்கலாம்.



குறிப்பாக இதற்கு தோட்டம் தான் இருக்க வேண்டும் என்பது அவசியம் இல்லை, ஒரு மாடி இருந்தால் போதும், முதலீடு என்பதை பொறுத்தவரை கையில் ஒரு 20,000 ரூபாய் இருந்தால் போதும், முதலில் நூற்றுக்கும் மேற்பட்ட பூக்கும் தன்மையுடைய பூஞ்செடிகளை வாங்கி வைத்துக் கொள்ள வேண்டும், அதை மண்ணோடு தொட்டிகளுக்கு மாற்றி வைத்துக் கொள்ள வேண்டும்.

தினசரி தண்ணீர் தெளித்து, வீட்டில் பொதுவாக இருக்கும் தேங்காய் நார்கள், காய்கறி கழிவுகள் உள்ளிட்டவகளை உரமாக போட்டு வளர்க்கும் பட்சத்தில் பூக்கள் தினமும் பூத்து குலுங்கும், பின்னர் ஒரு விளம்பர பதாகை, பொக்கே செய்து தரப்படும் என வைத்தால் போதும், பெரிதாக பொக்கே செய்வதற்கு பொருட்கள் ஏதும் தேவையில்லை, கொஞ்சம் அழகு சாதன பொருட்கள், பூக்கள், டேப் இவ்வளவு இருந்தால் போதும்.

" மாதத்திற்கு ஒரு 30 முதல் 50 ஆர்டர்கள் வந்தால் கூட வீட்டில் இருந்தே பெரிய முதலீடு ஏதும் இல்லாம மாதம் ரூ 15,000 முதல் 20,000 வரை வருமானம் பார்க்க முடியும் "