Palm Leaf Selling Ideas - பொதுவாக பொங்கல் பண்டிகை அன்று வாசலில் கோலம் இட்டு, மண்கல் நட்டு, சூரியன் விடியும் முன், பனை ஓலைகளை பற்ற வைத்து, இனிப்பு பொங்கலும், வெண் பொங்கலும் உழவுக்கு துணை புரியும் சூரியனுக்காக படைப்பார்கள், என்ன தான் நகரங்களில் கேஸ் அடுப்புகள் வைத்து பொங்கல் இட்டாலும், இன்னும் கிராமங்களில் பெரும்பாலும் பொங்கல் இட பனை ஓலைகளை தான் காலம் காலமாக பயன்படுத்துகிறார்கள்.
அந்த வகையில் பனை ஓலைகளை மொத்த விலைக்கு வாங்கி இந்த பொங்கலுக்கு சாலையோர கடைகள் எவ்வாறு அமைப்பது என்பது குறித்து பார்க்கலாம், பொதுவாக அந்த காலக்கட்டத்தில் தமிழகத்தில் மட்டும் 50 கோடி பனை மரங்கள் இருந்ததாக வரலாறு உண்டு, ஆனால் தற்போது 4 முதல் 5 கோடி வரையில் தான் பனை மரங்கள் தமிழகத்தில் இருக்கின்றன.
இதில் பெரும்பாலான பனை மரங்கள் இராமநாதபுரம், நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் தான் பரந்து விரிந்து காணப்படுகின்றனர், நீங்கள் தென் தமிழகத்தில் தான் இருக்கிறீர்கள் என்றால் உங்களுக்கு சரியான வாய்ப்பு தான், நேரடியாக பனை தோட்டத்திற்கே சென்று மொத்தமாக ஒரு 2000 பனை ஓலைகளை வாங்குங்கள், ஓலை, ட்ரான்ஸ்போர்ட் என ஒரு ஓலை 15 ரூபாய் விலை ஆகும்.
நீங்கள் விற்கும் போது ஒரு ஓலை 25 முதல் 30 ரூபாய் வரை விற்கலாம், ஒரிரு மார்க்கெட் பகுதிகளில் வைத்து ஓலையை சந்தைப்படுத்த வேண்டும், ஒரே இடத்தில் குவிக்க கூடாது, ஒரு 100 முதல் 200 பேரை அணுகும் மார்க்கெட்டாக இருக்க வேண்டும், ஆளுக்கு ஒரு நான்கு ஓலைகள் வாங்கினால் கூட, மூன்றே நாளில் அனைத்து ஓலைகளையும் விற்று தீர்த்து விடலாம், வருமானம் என்று பார்க்கும் போது ரூ 50,000 முதல் 60,000 வரை பார்க்கலாம்.
" அதில் இலாபம் என்பது தனியாக ரூ 25,000 முதல் 30,000 வரை இருக்கும் என்பதில் ஐயமில்லை, மூன்றே நாளில் 50,000 வருமானம் பார்க்க நினைப்பவர்கள் உடனடியாக பனை ஓலையை வாங்க ஓடுங்கள் "