• India
```

பெண்களுக்கு வீட்டில் இருந்தே நல்ல வருமானம் பார்க்க வேண்டுமா...அப்படின்னா டிஜிட்டல் மார்க்கெட்டிங்னு ஒன்னு உங்களுக்காகவே இருக்கு...!

Digital Marketing Business Ideas

By Ramesh

Published on:  2024-12-04 22:59:51  |    1736

Digital Marketing Business Ideas - முதலில் டிஜிட்டல் மார்க்கெட்டிங்னா என்ன என்பது குறித்து பார்க்கலாம், டிஜிட்டல் மார்க்கெட்டிங் என்பது பெரிதாக ஒன்றும் அல்ல, ஒரு பொருள் அல்லது ஒரு பிராண்ட் அல்லது ஒரு குறிப்பிட்ட தொழிலை ஒரு சமூக வலை தள பிரபலங்கள் அல்லது அமைப்புகள், சமூக வலைதளங்களின் மூலம் ஆகவே விளம்பரப்படுத்துவது டிஜிட்டல் மார்க்கெட்டிங் என அழைக்கப்படுகிறது.

முன்பெல்லாம் ஒரு பொருளை பெரிதாக விளம்பரப்படுத்துவதற்கு கோடிகளில் முதலீடு செய்து நடிகர்களையோ, நடிகைகளையோ வைத்து போஸ்டர்கள், டெலிவிஷன் விளம்பரங்கள் மூலம் நிறுவனங்கள் விளம்பரம் செய்து கொண்டு இருந்தன, ஆனால் தற்போதெல்லாம் நிறுவனங்களுக்கு எளிதான முறையில் விளம்பரம் செய்ய ஏதுவாக டிஜிட்டல் மார்க்கெட்டிங் என்னும் வரம் கிடைத்து இருக்கிறது.



பொதுவாக பெண்கள் பலர் இந்த டிஜிட்டல் மார்க்கெட்டிங்கில் ஈடுபட்டு வருகின்றனர், சமூக வலைதளத்தில் ஓரளவிற்கு பிரபலம் ஆன பெண்களுக்கு, ஒரு சில நிறுவனங்களின் மூலம் விளம்பரங்கள் வருகின்றன, நார்மலாக அவர்கள் போடும் கன்டன்டில் இந்த விளம்பரத்தை இணைத்து போடுவதன் மூலம் ஒரு குறிப்பிட்ட வருமானம் ஒன்றை அந்த நிறுவனங்கள் அந்த விளம்பரத்திற்காக அவர்களுக்கு கொடுக்கின்றனர்.

பெரிதாக முதலீடுகள் ஏதும் இல்லை, ஆனாலும் உங்களது மூளைக்கு வேலை இருக்கும், ஒரு விளம்பரம் உங்களுக்கு வந்தால் அதை எந்த அளவிற்கு Innovative ஆக யோசித்து உங்களது கன்டன்டில் புகுத்துகிறீர்களோ அந்த அளவிற்கு அந்த விளம்பரத்திற்கு ரீச் இருக்கும், அந்த ரீச்களை பொறுத்து விளம்பரதாரர்கள் உங்களுக்கு வருமானத்தை கொடுப்பார்கள், ரீச்களை பொறுத்து தான் விளம்பரமும் அதிகமாக வரும்.

" பொதுவாக டிஜிட்டல் மார்க்கெட்டிங்கின் மூலம் மாதம் ரூ 25,000 முதல் 1,00,000 வரையிலும் கூட சம்பாதிக்க முடியும், எல்லாமே உங்களது டிஜிட்டல் கன்டன்ட்களின் தரத்தை பொறுத்தது தான் "