Digital Ads And Poster Creating Business - அனைத்துமே டிஜிட்டல் மையம் ஆகி விட்ட நிலையில் தற்போது நிறுவனங்கள் மற்றும் சிறு குறு தொழில்கள் என அனைவருமே டிஜிட்டல் விளம்பரம் செய்ய துவங்கி விட்டனர், ஒரு விளம்பரத்திற்கான நம்பகத்தன்மையை அதிகரிக்க அந்த விளம்பரத்தின் டிசைன் எப்படி இருக்கிறது என்பதையும் வாடிக்கையாளர்கள் உற்று நோக்குகிறார்கள்.
அந்த வகையில் டிஜிட்டல் விளம்பரம் என்றாலும் கூட டிசைன் மிகவும் முக்கியம் ஆனதாக இருக்கிறது, பொதுவாக இது போன்ற டிசைன்களை செய்ய நீங்கள் விரும்பினால் நீங்கள் ஒரு நிறுவனம் அமைத்து தான் துவங்க வேண்டும் என்று இல்லை, ஒரு சமூக வலைதள பேஜ்கள் மூலம் ஆகவே துவங்கலாம், முதலில் நேரடியாக சென்று ஆர்டர்களை பெற்றுக் கொள்ள வேண்டும்.
டிசைன்களை கொஞ்சம் அதிக நேரம் எடுத்து சிறப்பாக உரிய நேரத்திலும் அவர்களிடம் ஒப்படைக்கும் பட்சத்தில் டிஜிட்டல் ஆர்டர்களும் வர ஆரம்பிக்கும், பொதுவாக ஒரு விளம்பர டிஜிட்டல் டிசைனுக்கு ரூ 150 முதல் 300 வரை வாங்குகிறார்கள், வீடியோ விளம்பரங்களுக்கு ரூ 400 முதல் 500 வரை வாங்குகிறார்கள், சமூக வலைதளங்கள் மூலம் ஆகவும் நிறுவனங்கள் மற்றும் தொழில் செய்பவர்களிடம் ஆர்டர்களை கேட்கலாம்.
முதலீடு என்பது இத்தொழிலில் பெரிதாக இல்லை, மூளை தான் மூலதனம், இது போக கையில் ஒரு கணினியோ, லேப்டாப்போ இணைய வசதியுடன் இருந்தால் போதும், வீட்டில் இருந்தே கூட நீங்கள் இந்த தொழிலை செய்ய முடியும், மாதத்திற்கு ஒரு 80 முதல் 100 விளம்பரங்கள், லாகோ, வீடியோ Ads வாய்ப்புகள் வந்தால் கூட, வீட்டில் இருந்த படியே சராசரியாக ஒரு 25,000 ரூபாய் வரை சம்பாதிக்க முடியும்.
" இது போக ஆல்பம் சாங் போஸ்டர்கள், முகப்பு பக்கம், பட போஸ்டர்கள் செய்யவும் வாய்ப்பு கிடைக்கும் பட்சத்தில் உங்களது வருமானத்தை இன்னும் அதிகம் ஆக்க அதி வழிவகுக்கும் "