Curd Buttermilk Business Plan - தற்போதெல்லாம் இயற்கையான தயிர் மோர் இவற்றை எல்லாம் பார்ப்பதே அரிதாகி விட்டது, இயற்கையான பால் கிடைத்தால் தானே இயற்கையான தயிர் மோர் கிடைக்கும், பால் அனைத்தும் பாக்கெட் பால் ஆகி விட்டதால், இயற்கையான தயிர் மோர் எல்லாம் ஒரு சில கிராமங்களில் மட்டுமே கிடைக்கிறது, மாடு வளர்ப்பவர்கள் வீட்டிலும் கிடைக்கிறது.
சரி, தயிர் மோருக்கு பால் வேண்டுமே என்றால், கறவை மாடு வைத்திருப்பவர்களை அணுகுங்கள், அவர்களுக்கு தேவையான, விற்பனைக்கு போக மிச்சம் இருக்கும் பாலை உங்களிடம் மொத்தமாக கொடுக்க சொல்லுங்கள், அவ்வாறாக பாலை கொள்முதல் செய்து, சேர்த்து வைத்து, நன்கு காய்த்து உறை ஊற்றி வைத்து தயிர் ஆகவும், கடைந்து மோர் ஆகவும் வைத்துக் கொள்ளலாம்.
வீட்டிற்கு வெளியே இங்கு தயிர், மோர் கிடைக்கும் என ஒரு குட்டி போர்டு மட்டும் வைத்தால் போதும், வீட்டின் அருகே இருப்பவர்கள் தேவைக்கு ஏற்ப வாங்கி செல்வார்கள், இது போக ஏதும் விசேஷ விழாவிற்கும் தயிர், மோர் தேவைப்பட்டால் மொத்தமாக தயாரித்து கொடுக்கலாம், ஹோட்டல்களுக்கு தேவைப்பட்டாலும் கூட தயாரித்து தினசரி கொடுக்கலாம்.
இவ்வாறாக வீட்டில் இருந்தபடியே தயிர் மோர் தயாரிப்பில் ஈடுபட்டு ஒரு குறைந்தபட்ச வருமானத்தை ஈட்ட முடியும், பெரிதாக எந்த முதலீடுகளும் இல்லாமல், வெளியில் வேலைக்கு செல்ல முடியாத பெண்களால் இத்தொழிலை எளிதாக கையில் எடுத்து வீட்டிற்கு குறைந்த பட்சம் மாதம் ரூ 10,000 முதல் 15,000 வரை வருமானம் ஈட்டி கொடுக்க முடியும் என்பதில் ஐயமில்லை.