• India
```

போட்டி தேர்வுகளுக்கு உகந்தவாறு...ஒரு புத்தக கடை வைத்து...மாதம் ரூ 30000 வரை வருமானம் பார்க்கலாம்...!

Competitive Exam Book Shop

By Ramesh

Published on:  2025-01-23 10:02:45  |    253

Competitive Exam Book Shop - போட்டி தேர்வுகளுக்கான புத்தக கடை வைத்து ஒரு குறிப்பிடத்தக்க வருமானம் பார்ப்பது எப்படி என்பது குறித்து பார்க்கலாம்.

Competitive Exam Book Shop - போட்டி தேர்வுகளுக்கு படிப்பவர்கள் நாளுக்கு நாள் இந்தியாவில் அதிகமாகி கொண்டு இருக்கின்றனர், வருடத்திற்கு 15 இலட்சத்திற்கும் அதிகமானோர் UPSC எழுதுகின்றனர், 40 இலட்சத்திற்கும் அதிகமானோர் SSC எழுதுகின்றனர், கோடிகளுக்கும் அதிகமாக தமிழகத்தில் TNPSC எழுதுகின்றனர், பதிவு செய்பவர்கள் இலட்சங்களில் என்றாலும் கூட தேர்வாகுபவர்கள் வெறும் ஆயிரத்திலும் நூறுகளிலும் தான்.

பெரும்பாலும் UPSC படிப்பதற்கான வசதி எல்லா இடங்களும் இருந்தாலும் கூட பெரும்பாலும் North இந்தியாக்களில் இருக்கும் UPSC சென்டர்களிலேயே சென்று படிக்கின்றனர், அவர்கள் தான் ரிசல்ட்டும் அதிகம் கொடுக்கிறார்கள், காரணம் அவர்கள் உருவாக்கும் மெட்டீரியல் என்பது UPSC க்கு ஏற்றார் போல தரமானதாக உருவாக்குகிறார்கள்.



நம் தமிழகத்தையே எடுத்துக் கொண்டால் தென் தமிழகத்தில் இருக்கும் பலரும் சென்னை அண்ணா நகரில் தங்கி அங்கு இருக்கும் சென்டர்களில் படித்து TNPSC க்கு தயார் ஆகிறார்கள், காரணம் அவர்கள் தரமான மெட்டீர்யல்களை கொடுக்கிறார்கள், அந்த வகையில் ஒரு குறிப்பிடத்தக்க போட்டி தேர்வுகளுக்கான புத்தக கடையை தேவை இருக்கும் இடத்திலேயே வைத்தால் தேர்வர்களுக்கும் பயனுள்ளதாக அமையும்.

கையில் முதலீடு என்பது குறைந்தபட்சம் ஒரு 5 இலட்சம் வரை வைத்துக் கொள்ள வேண்டும், பின்னர் ஒரு சில பப்ளிகேசன்களுக்கும் சென்று புத்தகங்களை கொள்முதல் செய்ய வேண்டும், டெல்லி, சென்னை என அங்கு இருக்கும் முக்கிய அகாடமிகளில் இருந்து புத்தகங்களை கொள்முதல் செய்தும், NCERT, தமிழ்நாடு பாட புத்தகங்களையும்  கொள்முதல் செய்து வைத்துக் கொள்ளலாம்.

" இதன் மூலம் போட்டி தேர்வர்கள் பல கி.மீ பயணம் செய்து படிப்பதை காட்டிலும் உங்களிடம் புத்தகங்களை வாங்கி அவர்கள் இருக்கும் இடத்திலேயே இருந்து படிப்பார்கள், எல்லா போட்டி தேர்வுகளுக்கான புத்தகமும் உங்களிடம் இருக்கும் பட்சத்தில் மாதம் சராசரியாக இந்த புத்தககடை மூலம் ரூ 30000 வரை வருமானம் பார்க்கலாம் "