Coconut Coir Scrubber Making Business - பொதுவாக பாத்திரம் விளக்குவதற்கு தற்போது பல ஸ்க்ரப்பர்கள் மார்க்கெட்டில் கிடைக்கின்றன, ஸ்டீல் ஸ்க்ரப்பர்களை எடுத்துக் கொண்டால் அது நன்றாக பாத்திரங்களை துலக்கினாலும், சில்வர், அலுமினிய பாத்திரங்களை ஸ்க்ரேட்ச் ஆக்கும், அதே சமயத்தில் ஸ்பாஞ்ச் ஸ்க்ரப்பர்களை எடுத்துக் கொண்டால் ஒரு நாள் பாத்திரம் துலக்குவதற்குள் நூல் நூலாகி விடும்.
ஒரு காலத்தில் நம் வீட்டில் இந்த ஸ்க்ரப்பர்கள் எல்லாம் புழக்கத்தில் இல்லாத போது, தேங்காய் நாரை பயன்படுத்தி பாத்திரம் துலக்குவர், அப்போதெல்லாம் குடுமியோடு தேங்காய் வரும், அந்த குடுமியை தனியாக பாத்திரம் துலக்குவதற்கு என்றே பத்திரப்படுத்தி வைத்து இருப்பார்கள், ஒரு தேங்காய் நாரை வைத்தே குறைந்த பட்சம் 15 நாட்கள் வரை பாத்திரம் துலக்க முடியும்.
Coconut Waste Business -அந்த வகையில் தற்போது தேங்காய் நார் ஸ்க்ரப்பர்களுக்கான தேவை என்பது அதிகரித்து இருக்கிறது, சரி தேங்காய் நார்களை எப்படி கொள்முதல் செய்வது என்றால், நேரடியாக தேங்காய் பண்ணைக்கு செல்லலாம், கேரளா, உடன்குடி, கோவை போன்ற இடங்களில் தான் தேங்காய் அதிகமாக விளையும் என்பதால் அங்கு நேரடியாக சென்று தேங்காய் நார்களை மலிவாக மொத்தமாக கொள்முதல் செய்து கொள்ளலாம்.
கொள்முதல் செய்த தேங்காய் நார்களை நன்கு உதிர்த்து, கொஞ்சம் தண்ணீர் தெளித்து காய வைக்க வேண்டும், பின்னர் பிளாஸ்டிக் வலை கடைகளில் கிடைக்கும், அதை ரவுண்ட் கட்டர் மூலம் கட் செய்து தேங்காய் நார்களை கட்டிக் கொள்ள வேண்டும், சந்தைகளில் ஒரு தேங்காய் நார் ஸ்க்ரப்பர் 15 ரூபாய்க்கு விற்கப்படுகிறது, ஒரு வாரத்திற்கு உங்களால் 1000 ஸ்க்ரப்பர்கள் சந்தைப்படுத்தினால் கூட மாதம் 40,000 ரூபாய் வரை வருமானம் பார்க்க முடியும்.
" ஸ்க்ரப்பர் தயாரிப்பிற்கும், பேக்கிங்கிற்கும் மெசின்கள் கூட இருக்கின்றன, மெசின்கள் வைத்து செய்து தொழில் செய்திடும் போது தயாரிப்பை அதிகப்படுத்தி வருமானத்தையும் பெருக்கிட முடியும் "