தமிழ்நாடு அரசு பொதுமக்களின் நலனுக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
தமிழ்நாடு அரசு பொதுமக்களின் நலனுக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அது தொடர்பான தகவலை நமது இணையதளப்பக்கத்தில் பகிர்ந்து வருவதை வழக்கமாக வைத்து இருக்கிறோம், தற்போது மக்கள் குறைந்த விலையில் மருந்துகளை பெற ‘முதல்வர் மருந்தகங்கள்’ என்ற திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இதன் ஒரு பகுதியாக, சென்னையில் புதிய முதல்வர் மருந்தகம் அமைக்க இணையதளம் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கான வழிகாட்டுதல்கள் மற்றும் தேவையான தகவல்களை அரசு வெளியிட்டுள்ளது.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த சுதந்திர தின உரையில், "பொதுப் பெயர் (ஜெனரிக்) மற்றும் பிற மருந்துகளை மக்களுக்கு குறைந்த விலையில் வழங்க 1,000 முதல்வர் மருந்தகங்கள் தொடங்கப்படும்" என்று அறிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.
தமிழ்நாடு முழுவதும் முதல்வர் மருந்தகம் அமைக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் www.mudhalvarmarundhagam.tn.gov.in இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க B.Pharm / D.Pharm பட்டம் பெற்றிருக்க வேண்டும் அல்லது அந்தத் துறையில் அனுமதி பெற்றவராக இருக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி தேதி 05.02.2025 ஆகும். மேலும், மருந்தகம் அமைக்க விரும்புவோர் குறைந்தபட்சம் 110 சதுர அடிக்கு குறையாமல் சொந்த இடம் அல்லது வாடகை இடம் வைத்திருக்க வேண்டும்.