Child Care Center Ideas - குழந்தைகள் பராமரிப்பு நிறுவனம் ஆரம்பித்து ஒரு குறிப்பிடத்தக்க வருமானம் பார்ப்பது எப்படி என்பது குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
Child Care Center Ideas - முதலில் குழந்தைகள் பராமரிப்பு நிறுவனம் என்பது, ஒரு குடும்பத்தில் ஏதாவது சூழலால் குழந்தைகளை பார்த்துக் கொள்ள முடியாதவர்கள் தங்களது குழந்தைகளை கொஞ்ச நேரம் அந்த பராமரிப்பு நிறுவனத்தில் விட்டு செல்வார்கள், உதாரணத்திற்கு ஒரு வீட்டில் கணவன், மனைவி என இருவரும் வேலை செய்யும் பட்சத்தில் அவர்களது குழந்தைகளை அலுவலகத்திற்கு கூட்டிச் செல்ல இயலாது.
அந்த வகையில் அலுவலகத்திற்கு செல்லும் வழியில் குழந்தைகளை இந்த குழந்தைகள் பராமரிப்பு நிறுவனத்தில் விட்டுச் செல்வார்கள், அங்கு இருப்பவர்கள் அந்த குழந்தையின் பெற்றோரின் அலுவலக நேரம் முடியும் மட்டும் நன்கு கவனித்துக் கொள்வார்கள், ஒரு சிலர் இந்த அமைப்பை வீட்டிலேயே நடத்துகின்றனர், இன்னும் சிலர் கிட்ஸ் கார்டன் போல தனியாக வைத்தும் நடத்துகின்றனர்.
முதலில் இப்படி ஒரு அமைப்பை தோற்றுவிப்பதற்கு முறையான ஆவணமும், பஞ்சாயத்து அல்லது நகராட்சிகளில் லைசென்ஸ்சும் எடுத்துக் கொள்வது அவசியம், அவர்கள் குழந்தைகளை பராமரிப்பதற்கு சரியான வசதிகள் எல்லாம் இருக்கிறதா என்பதை பார்த்து விட்டு உங்களுக்கான ஒரு நிறுவன ஆவணத்தை வழங்குவார்கள், முதலீடு என்னும் போது குறைந்த பட்சம் ஒரு 2 முதல் 4 இலட்சங்கள் தேவைப்படும்.
குழந்தைகளை ஒரு அறையில் வைத்து பராமரிக்கிறீர்கள் என்றால் அந்த அறையை சுற்றி குழந்தைகளுக்கு பிடித்த அத்துனையும் இருக்க வேண்டும், அல்லவா, அதற்கு தான் அந்த முதலீடு, குழந்தைகள் அதிகமாகும் போது ஒன்றிரண்டு ஆசிரியர்களையும் நியமித்துக் கொள்ளலாம், பொதுவாக ஒரு குழந்தையை பராமரிப்பதற்கு, பராமரிக்கும் நேரத்தை பொருத்து ரூ 2000 முதல் 5000 வரை வாங்குகிறார்கள்.
" ஒரு 10 முதல் 15 குழந்தைகள் நிறுவனத்தில் இணைக்கப்பட்டால் கூட செலவுகள் எல்லாம் போக சராசரியாக மாதம் ரூ 30000 வரை வருமானம் பார்க்கலாம் "