Chicken Pakoda Shop Ideas Tamil - இங்கு KFC எல்லாம் வருவதற்கு முன்பாகவே தமிழகத்தில் சிக்கன் பக்கோடா என்ற சுவையான ஸ்னேக்ஸ் இருந்து வந்தது, பெரும்பாலும் சிக்கன் பகோடா தள்ளுவண்டி கடைகளில் இருக்கும், 50 ரூபாய்க்கு வாங்கினாலே நல்ல முறுமுறுப்பான சிக்கன் பக்கோடா இரண்டு பேர் சாப்பிடும் அளவுக்கு கிடைக்கும், ஒரு இரவு 7-8 மணி சமயங்களில் சாதாராணமாக மார்க்கெட் பகுதிகளில் சிக்கன் பக்கோடா கடைகளை பார்க்க முடியும்.
சரி, முதலில் சிக்கன் பக்கோடா கடை எப்படி வைப்பது என்றால், முதலில் கியாஸ் கனெக்சனுடன் கூடிய ஒரு தள்ளுவண்டி, அதை நல்ல சந்தை பகுதிகளில் மக்கள் கூடும் இடங்களில் நிறுத்தி வைக்க வேண்டும், சிக்கனை பண்ணைகளிலோ மொத்த விலைகடைகளிலோ வாங்கி கொள்ளலாம். மொத்த விலை கடைகளில் வாங்கிக் கொள்ளும் போது வெட்டியே கிடைக்கும்.
பண்ணைகளில் உறிக்காமல் வெட்டாமல் கிடைக்கும், என்ன அங்கு விலை கொஞ்சம் மலிவாக கிடைக்கும், சராசரியாக மொத்த விலையில் எலும்புகள் இல்லா வெட்டப்பட்ட சிக்கன் ரூ 300 முதல் 350 வரையில் சந்தைகளில் கிடைக்கும், பொதுவாக 100 கிராம் சிக்கன் பக்கோடா சந்தைகளில் 80 ரூபாய் வரையில் விற்கப்படுகிறது, நீங்கள் ஒரு 60 ரூபாய்க்கு விற்கலாம்.
விலை கம்மியாக இலாபத்தை குறைத்து விற்கும் போது வாடிக்கையாளர்கள் அதிகம் உங்கள் கடையை தேடி வருவார்கள், 100 கிராம் சிக்கன் பக்கோடா 60 ரூபாய் என விற்கும் போது ஒரு கிலோ 600 ரூபாய் வரையில் விற்பனை ஆகும், தினசரி ஒரு 4 முதல் 5 கிலோ விற்பனை செய்தால் தினசரி ரூ 3000 வரை வருமானம் பார்க்கலாம், அதில் இலாபம் என்று பார்க்கும் போது ரூ 1000 முதல் 1500 வரை கையில் நிற்கும்.
" தினசரி மாலை ஒரு 6 மணி முதல் 10 மணி வரை கடை வைத்தால் போதும், மாதம் தாராளமாக ரூ 30,000 வரை இலாபமாக கையில் ஈட்டலாம் "