Candle Making Business - மெழுகு விற்பனை என்பது தற்போது முன்பு போல இல்லை என்றாலும் கூட, இன்னும் சர்ச்களில், பிறந்தநாள் விழாக்கள், அலங்கரிப்புகள் ஆகியவற்றில் மெழுகுவர்த்திகள் பயன்பாட்டில் தான் இருக்கின்றன, வீட்டில் இருந்தே ஏதாவது சிறிய முதலீட்டில் தொழில் செய்ய நினைப்பவர்களுக்கு மெழுகு தயாரிப்பு தொழில் ஒரு சிறந்த தொழிலாக அமையும்.
மெழுகு தயாரிப்பிற்கு முதலில் மெழுகு அவசியம் அதை மொத்த விலைகளில் வாங்கி கொள்ளலாம், மெழுகு தயாரிப்பிற்கு மிக மிக முக்கியமானது மோல்டுகள், கலர் ஏஜெண்ட்கள், திரவியங்கள், திரிகள், முதலில் மெழுகை நன்கு பதமாக காய்ச்சி, மோல்டுகளில் ஊற்றி நீண்ட நேரம் காய வைக்க வேண்டும், கொஞ்சம் பாதுகாப்பாக செய்ய வேண்டிய வேலை, ஆனாலும் வீட்டில் இருந்தே செய்ய முடியும்.
மெழுகு தயாரிக்கும் கிட்கள் எல்லாம் கையில் இருக்கும் பட்சத்தில் மெழுகு தயாரிப்பு என்பது எளிதான வேலை தான், முதலீடும் மிக மிக கம்மி, 1 கிலோ மெழுகில் சிறிய மெழுகுவர்த்திகள் 100 எண்ணம் செய்ய முடியும். பெரிய மெழுகுவர்த்திகள் என்றால் 25 எண்ணம் செய்யலாம், இலாபங்களை பொறுத்தமட்டில் 70% முதல் 85% வரை மெழுகுவர்த்தி தயாரிப்பில் இலாபம் இருக்கும்.
ஆனால் சரியான சந்தைப்படுத்துதல் இருக்க வேண்டும், பலரும் மெழுகு தயாரிப்பை கைவிட காரணம் சரியான சந்தைப்படுத்துதல் இல்லாமை தான், சர்ச்கள், ஒரு சில தொழிற்சாலைகள், அலங்கரிப்பு மையங்கள், பேக்கரிகள் என இவைகள் தான் மெழுகு சந்தையின் மூலதனம், இவைகளை டார்கெட் செய்து சந்தைப்படுத்தினால் மெழுகு தயாரிப்பில் மிகப்பெரிய அளவில் இலாபம் பார்க்க முடியும்.
" பெரிய அளவில் செய்ய முடியாது, வீட்டு பெண்களாக இருக்கிறோம் என்றால், அருகில் இருக்கும் சர்ச் மற்றும் அதை சுற்றி இருக்கும் கடைகளுக்கு மட்டும் விநியோகம் செய்தால் கூட மாதம் ரூ 10,000 வரை வருமானம் பார்க்கலாம் "