Business With Just 500 RS - 500 ரூபாய வச்சு என்னங்க செய்ய முடியும் என்றால், நிச்சயம் செய்ய முடியும், செய்யும் முதலீட்டை விட கொள்ளும் ஆர்வமும், யுக்தியும் தான் நீங்கள் நடத்துகிற தொழிலை நல்ல உயரத்திற்கு கொண்டு செல்லும்
Business With Just 500 RS - ஏதாவது
பெரிய காய்கனி மார்க்கெட்டிற்கு செல்ல வேண்டும், வியாபாரத்திற்கு என்று சொல்லி ஒரு 25 கிலோ பல்லாரியை ஒரு சாக்கில் கட்டி எடுங்கள், கிலோ 20 ரூபாய் போட்டு வாங்கி கொள்ளுங்கள். ஒரு சைக்கிளை எடுத்துக் கொள்ளுங்கள், எங்காவது தராசு கிடைக்கும் பட்சத்தில் வாங்கி வைத்துக் கொள்ளுங்கள், சைக்கிளை காலை ஒரு 7 மணி போல எடுத்துக் கொண்டு, ’பல்லாரி, பல்லாரி...’ என கூவிக் கொண்டே
தெரு முழுக்க சுத்த வேண்டும். விலை 40 ரூபாய் என நிர்ணயுங்கள்.
கிட்டதட்ட
ஒரு 10 மணிக்கு உள்ளாகவே உங்களால் 25 கிலோ பல்லாரியை விற்று தீர்த்து விட முடியும். நீங்கள் வாங்கின 500 ரூபாய்க்கு செலவுகள் எல்லாம் போல 400 ரூபாய் இலாபம் நிற்கும், தற்போது மொத்தமாக உங்கள் கைகளில் 900 ரூபாய் இருக்கும். ஒரு 200 ரூபாய் கையில் வைத்துக் கொண்டு அடுத்த நாள் 700 ரூபாய்க்கு பல்லாரி வாங்குங்கள், அதாவது 35 கிலோ, அதே 40 ரூபாய்க்கு தெருக்காட்டில் விற்கும் பட்சத்தில் அசலுடன் இலாபமும் சேர்த்து செலவுகள் எல்லாம் போக ஒரு 1,300 ரூபாய் கையில் இருக்கும்.
அடுத்தடுத்த நாட்களில், ஒரே காய்கறியை எடுத்துச் செல்லாமல் வேற வேற காய்கனிகளை எடுத்து தெருக்காட்டில் சுத்த வேண்டும், இவ்வாறாக தொடர்ந்து 1 மாதத்திற்கு காய்கனியை எடுத்துக் கொண்டு சுற்றும் பட்சத்தில் செலவுகள், சாப்பாடு எல்லாம் போக அசலோடு, இலாபமும் சேர்த்து முப்பதாம் நாளில் குறைந்த பட்சம் உங்கள் கைகளில் 40,000 ரூபாய் இருக்கும். இதில் கழிவுகள், செலவுகள் என எல்லாம் கழித்தது போக தான் இந்த ரூபாய்.
பின்னர் இந்த 40,000 ரூபாயை எப்படி சாமர்த்தியமாக என்ன செய்ய போகிறீர்கள் என்பது உங்களது கைகளில் தான் இருக்கிறது,500 ரூபாய் எப்படி 40,000 ஆனது என்று சற்றே யோசித்து பாருங்களேன், கிட்ட தட்ட ஒரே மாதத்தில் 800 மடங்கு இலாபம் ஈட்டி இருக்கிறீர்கள், தொழிலுக்கு எப்போதுமே முதலீடு பெரிதாக இருக்க வேண்டும் என்று அவசியம் இல்லை, முயற்சியும், ஆர்வமும் தான் உங்களை உங்கள் தொழிலை நல்ல உயரத்திற்கு எடுத்துச் செல்லும்.