ராமநாதபுரத்தில் உள்ள புதுக்கோவில் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி பாலு. இவர் தனது எட்டு ஏக்கர் இடத்தில் தோட்டக்கலை துறையின் மூலம் தேனீ வளர்ப்பு உட்பட்ட பல்வேறு விவசாயப்பணிகள் செய்து வருகிறார்.
ராமநாதபுரத்தில் உள்ள புதுக்கோவில் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி பாலு. இவர் தனது எட்டு ஏக்கர் இடத்தில் தோட்டக்கலை துறையின் மூலம் தேனீ வளர்ப்பு உட்பட்ட பல்வேறு விவசாயப்பணிகள் செய்து வருகிறார்.
இவரின் மகன் நந்தக்குமார், டிப்ளமோ மெக்கானிக்கல் படித்து விட்டு தேனீ வளர்ப்பில் உள்ள ஆர்வத்தில் தோட்டக்கலை துறையில் மானியம் பெற்று தற்போது 400 தேனீ பெட்டியில் தேனீக்களை வளர்த்து மாதம் ரூ.50 ஆயிரம் வரை ஈட்டி புதிய முயற்சியைக் கையாண்டு தொழில் புரிந்து வருகிறார்.
தேனீ வளர்ப்பு குறித்து கூறியதாவது, “தோட்டக்கலை துறையின் மூலம் தனது தந்தை தேன்பெட்டிகள் வாங்கி சிறியளவில் செய்து வந்துள்ளார். இதன் பின் கொரோனாவிலிருந்து டிப்ளமோ படித்து முடித்த பிறகு இதன் மீது உள்ள ஆர்வத்தில் கூடுதலாக தேன்பெட்டிகள் வாங்க தொடங்கி எட்டு ஏக்கர் இடத்தில் பூக்கள் இருக்கும் இடத்தில் ஆங்காங்கே தேன்பெட்டிகள் வைத்துள்ளேன்.
இதனை பெரியதாக செய்ய வேண்டும் என்று தொடங்கி தற்போது, 400 தேன் பெட்டிகள் வைத்து ராமநாதபுரம் சுற்றுவட்டாரத்தில் உள்ள கடைகள், வீடுகளில் ஒருகிலோ ரூ.600-க்கு விற்பனை செய்து வருகிறேன். தேன் பெட்டி, அதற்கான ஸ்டான்ட் இரண்டும் ரூ.2300-க்கு விற்பனை செய்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.