Beauty Services Ideas Tamil - பொதுவாக இல்லத்தரசிகள் தற்போதெல்லாம் தங்களால் முடிந்த வருமானத்தை வீட்டிற்கு ஈட்டிக் கொடுக்க நினைக்கின்றனர், அவர்களுக்கு வீட்டு வேலைகள் போக மிச்சம் இருக்கும் நேரத்தில் ஏதாவது ஒரு தொழில் துவங்க வேண்டும் என்ற எண்ணம் இருந்து கொண்டே இருக்கிறது, அந்த வகையில் ஒரு பார்ட் டைம் தொழில் போல Beauty Services செய்யலாம்.
அதாவது ஏதாவது விழா, திருமணம், வைபவங்களின் போது மேக்கப், மணமகளுக்கு சீலை கட்டுதல், ஹேர் ஸ்டைலிங், மெஹந்தி என அனைத்து அழகுபடுத்தும் விடயங்களையும் ஒரு தொகுப்பாக செய்வது தான் Beauty Services, எனப்படுகிறது, இதற்கு நீங்கள் தனியாக நிறுவனம், ஷாப் தான் வைக்க வேண்டும் என்பது அவசியம் இல்லை, ஒரு பேஸ்புக் பக்கம், இன்ஸ்டா பக்கம் கூட போதும்.
இது போக வீட்டின் அருகிலேயே ஏதாவது வைபவம் நடக்கும் போது, அவர்களுடன் ஒரு இணக்கம் செய்து கொண்டு செய்து கொடுக்கலாம், ஒரு முறை Beauty Services பெஸ்ட் ஆக செய்து கொடுத்தாலே, அடுத்தடுத்து அதை பார்த்து அடுத்தடுத்த வைபவங்களுக்கான ஆர்டர் தானாக வரும், இதில் முக்கியம் ஆனது ஒருவர் தங்களை எவ்வாறு அழகு படுத்திக் கொள்வாரோ அதை விட மேன்மையாக இன்னொருவருக்கும் செய்ய வேண்டும் என்பது தான்.
இல்லத்தரசிகள் இதை ஒரு பார்ட் டைம் சர்வீஸ் ஆக கூட செய்யலாம், பொதுவாக இதற்கு என்று ஒரு சர்வீஸ் புக்லெட் வைத்து இருப்பார்கள், அதில் ஒரு சில காம்போக்கள் இருக்கும், அந்த காம்போக்கள் ரூ 10,000 முதல் 40,000 வரையில் இருக்கும், பொதுவாக விழாவிற்குரிய பெண்கள், விருப்பத்திற்கு ஏற்ப காம்போக்களை செலக்ட் செய்து கொள்ளலாம்.
" மாதத்திற்கு ஒரு விழா என்று வந்தால் கூட அவர்கள் செலக்ட் செய்யும் காம்போவை பொறுத்து குறைந்தபட்சம் ரூ 10,000 அல்லது அதிகபட்சம் ரூ 40,000 வரை வருமானம் ஈட்ட முடியும் "